Advertisment

கொரோனா பாதிப்பு: கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா? பகுத்தறிவா? - ஆ.ராசா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா பாதிப்பு: கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா? பகுத்தறிவா? - ஆ.ராசா

கொரானா வைரஸ் கவலை கொள்ளும் விதத்தில் அதிவேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 81 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள், தியேட்டர்கள், மால்கள் போன்றவை மூடப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருமணம் உள்ளிட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளையும் புறக்கணிக்க அந்தந்த மாநிலங்கள் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை - தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை

அதேபோல், அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அந்த உத்தரவில், தமிழக சுகாதாரத்துறை அறிவுரையின்படி அனைத்து கோயில்களிலும் விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.

மேலும், கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா அறிகுறியுடன் வரும் பக்தர்கள் கண்டறியும் பட்சத்தில் அவர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல வேண்டாம் என்று அறிவுரை வழங்க வேண்டும். மேலும், சுகாதாரத்துறையின் அறிவுரையின் படி கோயில்களில் அடிக்கடி கிருமி நாசினி மருந்துகளை அடிக்கடி தெளிக்க வேண்டும். அவ்வாறு கோயில்களில் ஊழியர்கள் தெளிக்கின்றனரா என்பதை அவர்கள் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும் போன்ற பல அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பு தீவிரமானால், நாட்டின் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்திக்கும்

அதேபோல், உடல்நலம் குன்றிய பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிருங்கள் என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற அறிவிப்புகள் குறித்து திமுக எம்பி ஆ.ராசா ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சர்ச்சையாகியுள்ளது. அதில், "நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

13, 2020

அதாவது, நோய் வந்தால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வேண்டுவார்கள். அந்த கோவிலுக்கே வரக் கூடாது என்றால், அது பக்தியா? பகுத்தறிவா? என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.

ராசாவின் ட்வீட் தற்போது சர்ச்சையான விவகாரமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment