Advertisment

கொரோனா வைரஸ் கண்காணிப்பு வளையத்தில் சென்னை வணிக வளாகங்கள்

சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். இவர்களினால் அவர்களது குடும்பத்தினருக்கு அதிகளவில் தொற்று ஏற்பட வாய்ப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, Chennai,thiruvananthapuram,pharmaceutical industry,Greater Chennai Corporation,Government General Hospital, covid,coronavirus,chennai corporation,corona test, ,coronavirus, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

corona virus, Chennai,thiruvananthapuram,pharmaceutical industry,Greater Chennai Corporation,Government General Hospital, covid,coronavirus,chennai corporation,corona test, ,coronavirus, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

சென்னை வணிகவளாகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் இரண்டாவது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த அரியலூரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது முதலில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கிரேட்டர் சென்னை கார்ப்பரேசன் துணை ஆணையர் (சுகாதாரம்), மதுசுதன் ரெட்டி கூறியதாவது, அந்த வணிக வளாக நிர்வாகத்திடம், மார்ச் 10 முதல் மார்ச் 17ம் தேதி வரை இங்கு வந்த மக்களிடம் தனிமையில் இருக்குமாறும் தேவைப்படின் மருத்துவ சோதனைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்வாகத்திடம், வருகை தந்த வாடிக்கையாளர்கள் குறித்த விபரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அந்த வணிக வளாகத்தில், சுகாதாரக்குழு விரைவில் சோதனை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதால் அவர்கள் குறித்த விபரங்களை தர இயலவில்லை என்று அத்தரப்பிலிருந்து பதில் வந்துள்ளதால், வாடிக்கையாளர்களை அறிவிக்கும் வகையில், விளம்பரம் தருமாறு அவர்களை கேட்டுக்கொண்டுள்ளதாக ரெட்டி மேலும் கூறினார்.

கடந்த மார்ச் 15ம் தேதி, கோடம்பாக்கம் குட் ஷெப்பர்ட் கட்டடத்தில் இயங்கி வரும் விசா மையத்தில் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் அந்த மையத்திற்கு சென்றவர்கள் தனிமையில் இருக்குமாறும், மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. இவர்கள் பொது சுகாதார மையத்தை தொடர்புகொள்ளுமாறும் இல்லையேல் கட்டுப்பாட்டு அறை எண் 044 2538 4520 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு சென்னை கிரேட்டர் கார்ப்பரேசன் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். இவர்களினால் அவர்களது குடும்பத்தினருக்கு அதிகளவில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருந்து வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் சமீபத்தில் திருவனந்தபுரம் சென்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்த 43 வயது வாலிபர் மற்றும் 73 வயது பெண் உள்ளிட்டோருக்கும் தொற்று பரவியது. இவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, வெளிமாநில, வெளிநாடு பயண விபரங்கள் இல்லாதவர்களிடமும் கொரோனா தொற்று சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வருகிறது. பயணம் மேற்கொண்ட இளைய வயதினரிடமிருந்து அவர்களின் வீடுகளில் உள்ள முதியவர்களுக்கு இந்த தொற்று எளிதில் பரவி விடுகிறது. இளைய வயதினருக்கு நோய் எதிர்ப்பு திறன் அவர்களுக்கு தொற்று தாமதமாகவே வருகிறது. வயது அதிகமாக உள்ளவர்கள் வீட்டினுள் இருக்கும்போதும் முக கவசங்களை அணிந்து இருக்குமாறு அறீவுறுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளை உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Chennai Corona Virus Minister Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment