Advertisment

கொரோனா தீவிரம்: சென்னையில் இன்று போலீஸ் எஸ்.ஐ., வணிகர் சங்க நிர்வாகி மரணம்

Corona deaths in Tamil nadu : மாம்பலம் சப் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து, காவல்துறையில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்த இரண்டாவது காவலர் இவர் ஆவார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, covid pandemic, covid deaths, chennai, tamilnadu, Police SI. Thangam selvaraj, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

TN Latest News Live Updates

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு போலீஸ் எஸ்.ஐ., மற்றும் சென்னை கோயம்பேடு வணிகர் சங்க நிர்வாகி மரணமடைந்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கொரோனா கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களில் ஒருவராக இருக்கும் காவல்துறையினரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.

இரண்டாது பலி : இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா நோய்த்தொற்றுக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.

மாம்பலம் சப் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து, காவல்துறையில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்த இரண்டாவது காவலர் இவர் ஆவார்.

வணிகர் சங்க நிர்வாகி பலி : சென்னை கோயம்பேடு சந்தை வணிகர் சங்க தலைவராக உள்ள தங்கம் செல்வராஜ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

publive-image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தையடுத்த செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த தங்கம் செல்வராஜ்க்கு, நான்குநாட்களுக்கு முன்னால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைபலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

சென்னையில் கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் 22 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment