Advertisment

வீட்டில் தனிமைப்படுத்துதல், முக கவசம் அணிவதனால் ஏற்படும் பலன் - கொரோனா விழிப்புணர்வு குறித்த தெளிவான விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு, கொரோனாவுக்கு எதிரான போரில், மாநில அரசுக்கு தோள் கொடுப்போம். கொரோனா அரக்கனை விரட்டுவோம் என்று உறுதி ஏற்போமாக..

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 பேருக்கு கொரோனா பாதித்தது எப்படி?

உலகையே கொரோனா வைரஸ் பீதி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இந்தியாவிலும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். 573 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழ்நாட்டிலும் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனாலே தமிழக அரசு ஊரடங்கு எவ்வித தளர்வும் இல்லாமல் தொடரும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ( ஏப்ரல் 20ம் தேதி) ஒரே நாளில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 46,985 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6109 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சைக்கு பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சென்னை பெறுநகர மாநகராட்சி, சென்னை மருத்துவ கல்லூரியுடன் இணைந்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்துதல் என்றால் என்ன என்பது குறித்து சென்னை மருத்துவகல்லூரி பொதுசுகாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் ரகுநந்தனன் பதிலளிக்கிறார்.

யார் முக கவசம் அணிய வேண்டும், எத்தனை மணிநேரம் அணிய வேண்டும், மீ்ண்டும் பயன்படுத்தலாமா?. பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அவர் அளித்த பதில்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு, கொரோனாவுக்கு எதிரான போரில், மாநில அரசுக்கு தோள் கொடுப்போம். கொரோனா அரக்கனை விரட்டுவோம் என்று உறுதி ஏற்போமாக..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamilnadu Corona Virus Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment