Advertisment

சென்னையில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு: மாவட்ட வாரியாக பட்டியல்

COVID-19 Cases in Tamil Nadu: புதிதாக 64  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 25 பெண்களும், 39 ஆண்களும் அடங்குவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா அறிகுறிகள் பட்டியல் - எச்சரிக்கை செய்யும் ஆராய்ச்சிகள்

Latest Corona Reports in Tamil Nadu: கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை பட்டியலை தினமும் மாலை வெளியிட்டு வருகிறது, தமிழக சுகாதாரத்துறை. அந்த வகையில் தற்போது தமிழகத்தில்  மேலும் 64  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஏப்.26) நிலவரப்படி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் புதிதாக 64  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 25 பெண்களும், 39 ஆண்களும் அடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது. இன்றைக்கு மேலும் ஒருவர் பலியானதை அடுத்து, மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 24-ஆக  உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் விகிதம் 54.11 ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.27 ஆகவும் உள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 60. மொத்தமாக குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டுக் கண்காணிப்பில் 29056 பேரும், அரசு கண்காணிப்பில் 26 பேரும் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்

சென்னை - 523

கோவை - 141

திருப்பூர் - 112

திண்டுக்கல் - 80

மதுரை - 75

மதுரையில் இன்று 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் அதிகம் பாதிப்பை சந்தித்த மாவட்டங்களின் வரிசையில் 5ம் இடத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு: 1,885

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 24

குணமடைந்தோர் எண்ணிக்கை : 1020

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

publive-image

மாவட்டம் வாரியாக, இன்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,

சென்னை – 28

கள்ளகுறிச்சி - 1

மதுரை – 15

நாமக்கல் - 4

ராமநாதபுரம் - 1

சேலம் – 1

திருப்பூர் - 2

திருவள்ளூர் – 1

விழுப்புரம் - 4

விருதுநகர் – 7

என மொத்தம் தமிழகத்தில் 64 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment