Advertisment

எகிப்து 'ஏ சாரா' கப்பலில் பதினெட்டு தமிழர்கள் சிக்கித் தவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இங்கே காணலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எகிப்து 'ஏ சாரா' கப்பலில் பதினெட்டு தமிழர்கள் சிக்கித் தவிப்பு

Source : New York Times

Corona virus in Tamil Nadu News : ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து சென்னை வந்தவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 45 வயதுடைய அந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

 

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விமான நிலைய மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுவனை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு விமான நிலைய மருத்துவக்குழுவினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தனிமைபடுத்தி தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இங்கே காணலாம்.



























Highlights

    15:01 (IST)08 Mar 2020

    எகிப்து 'ஏ சாரா' கப்பலில் பதினெட்டு தமிழர்கள் சிக்கித் தவிப்பு

    எகிப்த் நாட்டில் நைல் நதியில் அருகில்  (Luxor city) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'ஏ சாரா' என்ற கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த பதினெட்டு இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். வெளிவிவகார அமைச்சகம் சார்பில் எகிப்த்திற்கான இந்திய தூதரகம் மூலம் தங்கள் சொந்த பந்தங்களை மீட்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  கப்பலில் இருக்கும் 33 பயணிகளுக்கும்,   12 பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  Luxor city அருகே தொடர்ச்சியாக அந்த கப்பல் ஐந்து நாளாக நின்றுக் கொண்டிருக்கிறது.  

    14:03 (IST)08 Mar 2020

    பிராய்லர் கோழி- கொரோனா வைரஸ் இணைப்பு ஆதாரமற்ற வதந்தி - உடுமலை  ராதாகிருஷ்ணன்

    பிராய்லர் கோழி சாப்பிடுவதால்  கொரோனா வைரஸ்  பரவுகிறது என்ற  ஆதாரமற்ற வதந்திகளை நம்பவேண்டாம்  பரவி வருவதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை  ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார் .

    ஊடகவியலாளர்களிடம் பேசிய திரு. ராதாகிருஷ்ணன், பிராய்லர் கோழி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார், ஏனெனில் கோழி நுகர்வு COVID-19 ஐ ஏற்படுத்தாது என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்  தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிததுளாளர். மேலும், மார்ச் 15 ஆம் தேதி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டுவார் என்று திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    13:28 (IST)08 Mar 2020

    கொரோனா வைரஸ்: வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதா? தவிர்ப்பதா ?

    விமானத்தில், நீங்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் பயணம் செய்வீர்கள், அவர்களின் பயணம் மற்றும் தொடர்பு வரலாறுகள் உங்களுக்குத் தெரியாது. விமானத்தில் ஏறுவதற்கு முன்பு  யாருக்கும் ஸ்கிரீனிங் செய்யப்பட மாட்டாது. எனவே, உங்கள் அருகில் இருக்கும் ஒரு பயனர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவரா? என்பதை உறுதியாக சொல்ல இயலாது ? 

    மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

    13:27 (IST)08 Mar 2020

    இந்தியாவில் கோரோனா வைரஸ்: முழு விவரம் (2/2)
    • ஆக்ரா:டெல்லி நோயாளியின் ஆறு குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
    • ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் பதினாறு இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களுடன் வந்த ஒரு இந்தியரும்  பாதிக்கப் பட்டுள்ளார்.  
    • காஜியாபாத்: தெஹ்ரானில் இருந்து திரும்பிய ஒருவர் கொரொனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் 
    •  தெலுங்கானா: துபாய் நாட்டிற்கு பயண வரலாறு கொண்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

    13:27 (IST)08 Mar 2020

    இந்தியாவில் கோரோனா வைரஸ்: முழு விவரம்

    கேரளா: இதுவரை எட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதில் மூன்று பேர் ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.    

    •  லடாக்: இரண்டு நபர்களுக்கு  கொரோனா வைரஸ் பாசிடிவ் என்று சோதனையில் தெரியவந்துள்ளது . அவர்கள், இருவருக்கும்  ஈரானுக்கு பயணம் செய்த  வரலாறு உள்ளது. 
    • தமிழ்நாடு: ஓமானுக்கு பயண செய்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . 
    •  டெல்லி: மூன்று நபர்களுக்கு கொரொனோ வைரஸ் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது . பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இத்தாலியில் இருந்தும், மற்றொருவர் மலேசியாவிலிருந்து பயணம் செய்தவர்கள்.  

    12:23 (IST)08 Mar 2020

    வேறு யாருக்கும் கொரோனா உறுதிசெய்யப்படவில்லை - தமிழக சுதாரத்துறை அமைச்சகம்

    ஓமனிலிருந்து சென்னை வந்த 45 வயது நபருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வேறு யாருக்கும் கொரோனா உறுதிசெய்யப்படவில்லை. தமிழக சுகாதாரத்துறை வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளது என்று தமிழக சுதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.  

    12:11 (IST)08 Mar 2020

    இணை பயணிகள் பரிசோதனை செய்ய - கேரளா அமைச்சர் தகவல்

    கேரள சுகாதார அமைச்சர் கே. கே ஷைல்ஜா, கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட  மூன்று நபர்கள் பயணித்த இரண்டு விமானங்களின் விவரங்களை வெளியிட்டார்.  அந்த விமானங்களில் பயணம் செய்த சக பயணிகள் அனைவரையும் அருகிலுள்ள மருத்துவ அதிகாரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.   ஹெல்ப்லைன் எண்கள்  -0471 2552056, 1056 (toll free)

    12:05 (IST)08 Mar 2020

    கேரளா மாநிலத்தில் புதிதாக மேலும்  ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ்

    கேரளா மாநிலத்தில் புதிதாக மேலும்  ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது . அவர்களில் மூன்று பேர் பிப்ரவரி 29 ஆம் தேதியன்று இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்கள். ஏற்கனவே, கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஐந்து பேரும்  பாத்நமதிட்டா பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப் பட்டுள்ளனர். 

    11:55 (IST)08 Mar 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் , நாளை முதல்வர் ஆலோசனை

    ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து சென்னை வந்தவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 45 வயதுடைய அந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை தமிழக முதல்வர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்துகிறார்.   

    Corona virus in Tamil Nadu: பிரதமர் மோடி, வரும் 13ம் தேதி துவங்கும் ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பெல்ஜியம் நாட்டின் புரூசல்ஸிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பீதி, சர்வேதேச நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது பயணத்தை அவர் ஒத்திவைத்துள்ளார்.

    கொரொனோ வைரஸ் கைகுலுக்குவதன் மூலமாக பரவுகிறது. ஏனெனில், வைரசால் பாதிக்கப்பட்ட நபர் தனது கைகளை பயன்படுத்தி தும்மியிருக்கலாம். மூச்சுத்திணறலை சரி செய்திருக்கலாம். எனவே, கை கொடுப்பதை தவிர்த்து வணக்கம் தெரிவிப்பது மிகவும் நல்லது

    Tamilnadu Palanisamy
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment