Advertisment

ரஜினிக்கு மு.க.அழகிரி ஆதரவா ? திடீர் விளக்க அறிக்கை

நண்பர் ரஜினிகாந்த் கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, tamil nadu, tasmac, rajinikanth, M k alagiri, twitter, fake account, police complaint, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

corona virus, lockdown, tamil nadu, tasmac, rajinikanth, M k alagiri, twitter, fake account, police complaint, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

நடிகர் ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு ஆதரவாக நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி விளக்கமளித்துள்ளார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு 3வது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதனயைடுத்து, தமிழகத்தில் 42 நாட்களுக்கு பிறகு கடந்த 7ம் தேதி, மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தனிநபர் இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளோடு உயர்நீதிமன்றமும் மதுக்கடைகளை திறக்க அனுமதித்தது.

மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோத, உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகள் சரிவர பின்பற்றப்படாததால், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டோர் வழக்கு தொடர, மதுக்கடைகளை, ஊரடங்கு முடியும்வரை மூட அதிரடி உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்நிலையில், மதுக்கடைகள் அடைக்கப்பட்டு 2 நாட்களுக்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் கஜானாவை நிரப்ப வேறு நல்ல வழிகளை பின்பற்றுமாறு அரசுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அழகிரி ஆதரவு? : இந்நிலையில், ரஜினியின் டுவிட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, சரியாக சொன்னீர்கள் நண்பா என்று மு. க. அழகிரி சொன்னது போன்று டுவிட் பதிவிடப்பட்டிருந்தது. ரஜினிக்கு அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது.

அழகிரி மறுப்பு : இதுதொடர்பாக தற்போது மு.க.அழகிரி தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “நண்பர் ரஜினிகாந்த் கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கும் இல்லை. அதை நான் பயன்படுத்தவும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajini Kanth Mk Alagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment