Advertisment

தமிழகத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பினர் தலைமறைவு வாழ்க்கை : கண்காணிப்பை முடுக்கிவிடும் உளவுத்துறை

மாநிலங்களில் சந்தேகங்களுக்கு இடமாக திரிபவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பினர் தலைமறைவு வாழ்க்கை : கண்காணிப்பை முடுக்கிவிடும் உளவுத்துறை

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால், தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த அமைப்பை சேர்ந்த வெளிநாட்டினர் பலர் தமிழகத்தின் பலபகுதிகளில் சட்டவிதிகளை மீறி பதுங்கியிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த வெளிநாட்டினர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 133 பேர் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த வெளிநாட்டினர் பலர், வெளிநாட்டினர் சட்டம் 1946 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவுகளின் கீழ் விதிகளை மீறி தமிழகத்தில் பதுங்கியுள்ளனர். இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இங்கு மத பிரசார கூட்டங்களுக்காக வந்து இங்கேயே பதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், பிரான்ஸ், எத்தியோப்பியா, கேமரூன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உலகத்தின் மற்ற நாடுகளுக்கு மத பிரசாரம் செய்ய வந்த மத பிரசாரகர்கள், அமெரிக்காவில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதின் மர்கஜ் பகுதியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று தமிழகம், தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு திரும்பிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறையின் அறிவுறுத்தலின்படி, ஏப்ரல் 2ம் தேதி நிலவரப்படி, டுரிஸ்ட் விசா மூலம் இந்தியாவிற்கு வந்த தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த 960 பேர் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைந்து முடுக்கி விடுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களில் சந்தேகங்களுக்கு இடமாக திரிபவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள், புதிதாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் சிலகாலமாகவே, இந்தியாவில் தங்கியிருந்து இஸ்லாமிய மக்களிடையே தங்களது மதத்தின் பலத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் நிடூர் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் 5 பேர், கேமரூன் நாட்டை சேர்ந்த 3 பேர் , பெல்ஜியம், காங்கோ நாட்டை சேர்ந்த தல ஒருவர் என 10 பேரை, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். டில்லியிலிருந்து காரைக்கால் வழியாக அவர்கள் மயிலாடுதுறை வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் பலர் தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நிடூர் பகுதியில் மதபிரசார கூட்டங்களில் ஈடுபட்டு வந்ததோடு அங்குள்ள இஸ்லாமிய குடும்பங்களுடனும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இவர்களுக்கு சோதனை நடத்தியதில் கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்திருந்த நிலையிலும், அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு போலீஸ் கஸ்டடியில் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.

இவர்கள் கடந்த 80 ஆண்டுகளாக ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர். இந்த முறை மட்டும் அவர்கள் மீது குற்றம் சுமத்துவது ஏன் என சென்னை தப்லிக் ஜமாத் மசூதியின் இமாம் ஹபீஜ் முகம்மது நுருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது கொரோனா தொற்று அதிகளவில் பரவியுள்ள நிலையில், உளவுத்துறையினரின் குஅறிவுறுத்தலின் பேரிலேயே இவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 4 இஸ்லாமிய குடும்பங்கள், காஞ்சிபுரத்தில் கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தப்லிக் ஜமாத்தை சேர்ந்த 80 வெளிநாட்டினர் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர்களை ஐக்கிய நலவாழ்வு கழகத்தினர் மூலம் வக்கீலை நியமித்து அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment