Advertisment

சென்னை ஸ்டான்லி மருத்துமவமனையில் கொரோனா சோதனை கியாஸ்க் - அசத்தும் சுகாதாரத்துறை

மருத்துவமனைகள் உள்ளிட்ட உயரமான கட்டடங்களில் டுரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசு, மருத்துவமனைகளின் உட்பகுதிகளில் சோதனைக்கு ரோபோக்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, tamil nadu, corona tests, kiosk, chennai, stanley hospital, minister vijayabaskar, tamil nadu government, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil, tamil news live, latest news in tamil, latest tamil news, tamil latest news, tamil nadu news, tamil video, funny videos, chennai news

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருபவர்களை சோதனை செய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கியாஸ்க் செயல்பாட்டினை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா சோதனையை எளிதாகவும் அதேசமயம் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (PPE) தேவைப்படாத கியாஸ்க் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கியாஸ்க் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைக்குப்பிறகும், கையுறைகள், சானிடைசரின் உதவியுடன் தூய்மைப்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சோதனைக்கு பயன்படும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், தனிமனித இடைவெளி போன்றவைகளே, நம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தனிமனித தொடர்பை குறைக்கும் வகையில், தொழில்நுட்ப அடிப்படையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மருத்துவமனைகள் உள்ளிட்ட உயரமான கட்டடங்களில் டுரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசு, மருத்துவமனைகளின் உட்பகுதிகளில் சோதனைக்கு ரோபோக்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment