கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,32,454
Corona Virus Today Report: தமிழகத்தில் இன்று (ஆக.,25) ஒரே நாளில் 6,998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.32 லட்சத்தை கடந்தது.
Advertisment
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,937 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 14 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 141 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-78) மூலமாக, இன்று மட்டும் 70,221 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 43 லட்சத்து 46 ஆயிரத்து 861 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,615 பேர் ஆண்கள், 2,336 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,36,294 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,54,980 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,998 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 107 பேர் உயிரிழந்தனர். அதில், 42 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 18 ஆயிரத்து 433 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 686 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 184 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,270 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27,949-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து 1,11,955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 2,623 பேர் உயிரிழந்துள்ளனர்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil