Advertisment

தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு

சென்னையில் ஒரு தமிழ் தொலைக்காட்சி சேனலில் பணிபுரிபவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் இன்றுவரை 27 ஊடகவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil tv channel coronavirus, tamil channel 27 journalists covid-19 positive, tamil tv covid-19 coronavirus cases, journalist coronavirus india, கொரோனா வைரஸ், தமிழ் தொலைக்காட்சி ஊடகவியளார்களுக்கு கொரொனா பாதிப்பு, ஊடகவியாளர்களுக்கு கொரொனா பாதிப்பு, சென்னை, தமிழ்நாடு, tamil nadu, tamil tv channel, india journalists covid-19 cases, chennai tv news covid-19, coronavirus covid-19 news updates, chennai, latest coronavirus news, latest tamil nadu coronavirus updates

சென்னையில் ஒரு தமிழ் தொலைக்காட்சி சேனலில் பணிபுரிபவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் இன்றுவரை 27 ஊடகவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஒரு தமிழ் தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள அரசு கொரொனா வைரஸ் சிறப்பு வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தமிழக பொது சுகாதார இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment
Advertisement

இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஊறுகையில், “அந்த சேனலில் முதல் நோய்த்தொற்று திங்கள் கிழமை தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு பணியாற்றிய மொத்தம் 92 ஊழியர்களை நடவடிக்கை எடுத்தோம். செவ்வாய்க்கிழமை பரிசோதனை முடிவுகள் வந்தபோது, அவரகளில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நாங்கள் ஏற்கெனவே, அவர்களை தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்களுடன் தொடர்புள்ளவர்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

இதனிடையே, அந்த தொலைக்காட்சி சேனலின் நிர்வாக இயக்குனர், பல நிருபர்கள் களத்தில் இருந்து செய்திகளை சேகரித்துக்கொண்டு வரும்போது இதைத் தடுக்க முடியாது என்று கூறினார். சேனலின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், “இந்த நேரத்தில் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுடன் ஒத்துழைப்பது எங்கள் பொறுப்பு. பல உயிர்களைப் பணயம் வைத்து சேனலை இயக்க முயற்சிக்க மாட்டோம். அது பொருத்தமாக இருக்காது... நாங்கள் அரசுடன் இணைந்து செயல்பட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். முழு பலத்துடனும் கூடுதலான செய்திகளுடனும் நாங்கள் விரைவில் வருவோம்” என்று அவர் நம்பிகை தெரிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Chennai Coronavirus Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment