Advertisment

10 நாட்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் வணிக வளாகங்கள் செயல்படத் தடை - சென்னை மாநகராட்சி அதிரடி

அதே போன்று கொத்தவால் சாவடி சந்தை 01.08.2021 முதல் 09.08.2021 காலை ஆறு மணி செயல்பட அனுமதி இல்லை என்று வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
10 நாட்களுக்கு குறிப்பிட்ட  இடங்களில் வணிக வளாகங்கள் செயல்படத்  தடை -  சென்னை மாநகராட்சி அதிரடி

Chennai Corporation orders closure of shops : கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 9 முக்கியமான பகுதிகளில் 10 நாட்களுக்கு கடைகள் செயல்பட அனுமதி மறுத்து அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

Advertisment

கோவிட் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கை, எவ்வித தளர்வுகளும் இன்றி 09.08.2021 வரை நீட்டித்து அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் மக்கள் அதிகம் கூடும் இங்களில் உள்ள வணிக வளாகங்கள் அடுத்த 10 நாட்களுக்கு செயல்படத் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகளில் வணிக வளாகங்கள் செயல்படாது?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் ப்ரூக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, பிலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சிநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இன்று (31/07/2021) முதல் 09/08/2021 வரை செயல்பட அனுமதி இல்லை என்று வணிக நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜீவால் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கொத்தவால் சாவடி சந்தை 01.08.2021 முதல் 09.08.2021 காலை ஆறு மணி செயல்பட அனுமதி இல்லை என்று வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment