கொரோனா தடுப்பு பணிக்கு நிதி அளிக்க மக்களிடம் முதல்வர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் புதிதாக 530 மருத்துவர்கள் 1000 செவிலியர்கள் 1538 ஆய்வக டெக்னீஷியன்களை நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் வேண்டுகொள்…

By: Updated: March 27, 2020, 07:54:50 PM

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் புதிதாக 530 மருத்துவர்கள் 1000 செவிலியர்கள் 1538 ஆய்வக டெக்னீஷியன்களை நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

கொரோன வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதித்தவர்களையும், கொரோனா அறிகுறி உள்ளவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, புதிதாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் 1,508 ஆய்வக டெக்னீஷியன்கள் (Lab Technician) மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய விதிகளுக்கு உட்பட்டு தெரிவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப்பட்டவுடன் 3 தினங்களுக்குள் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 200 அவசர கால ஊர்திகளை (Ambulance) உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளவர்கள் நிதி அளித்து உதவலாம் என்று பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நிதி அளிப்பவர்களை முதல்வரிடமோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ நேரில் நிதி வழங்குவது ஊக்குவிக்க முடியாது. ரூ.10 லட்சத்துக்கு மேல் நன்கொடைக்கு அளிப்பவர்களின் பெயர்கள், நிறுவனங்கள் விவரங்கள் பத்திரிகை செய்திகளின் வாயிலாக வெளியிடப்படும். வருமானவரி சட்டத்தின் படி நன்கொடை அளிப்பவர்களுக்கு 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus covid 19 cm edappadi k palaniswami call to people for donate cm relief fund

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X