Advertisment

ஆரம்பத்தில் குறைவு: இப்போது சரி சமமாக மற்ற மாவட்டங்களிலும் கொரோனா

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் 75% -க்கும் அதிகமான தொற்றுகளை கொண்டிருந்த நிலையில், இப்போது 60%-க்கும் குறைவாகவே உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus daily report, covid-19 positive cases today, covid-19 positive cases today new record, corona virus deaths in tamil nadu, tamil nadu covid-19 positive cases, சென்னை, மதுரை, latest tamil nadu coronavirus news, tamil nadu total coronavirus cases

TN Live Updates

Coronavirus in Tamil Nadu: ஜூலை 5 முதல் 1,02,572 நபர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றுகளில் 26,441 (25.8%) பேர் சென்னையிலிருந்து பதிவாகினாலும், 17,317 (16.9%) பேர் அருகிலுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பதிவானவர்கள். மீதமுள்ள 58,814 வழக்குகளில் (57.3%) பேர் பிற மாவட்டங்களிலிருந்து பதிவானவர்கள். தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களுக்கு மாறாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் 75% -க்கும் அதிகமான தொற்றுகளை கொண்டிருந்த நிலையில், இப்போது 60%-க்கும் குறைவாகவே உள்ளது.

Advertisment

’கொரோனாவிலிருந்து மீண்டது இப்படித்தான்’: விஷால் வீடியோ

கொரோனா மாவட்டவாரியாக தற்போதைய நிலவரம்

Coronavirus Districtwise Report கொரோனா மாவட்டவாரியான பாதிப்பு

அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளை பதிவிடும் பல மாவட்டங்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவை என்றாலும், எல்லா பகுதிகளிலும் கொரோனா பரவுகிறது என்பதே உண்மை. மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் சேலம், வடக்கில் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை, டெல்டாவில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

ஜூலை 5-ஆம் தேதி, 21 மாவட்டங்களில் 1,000-க்கும் குறைவான வழக்குகள் இருந்தன. ஆனால் (நேற்று) ஞாயிற்றுக்கிழமை, 1,000-க்கும் குறைவான வழக்குகள் உள்ள மாவட்டங்கள் வெறும் 11 மட்டுமே. இதேபோல், இந்த காலகட்டத்தில், 2,000-10,000 வழக்குகள் உள்ள மாவட்டங்கள் 5-லிருந்து 20-ஆக அதிகரித்துள்ளன.

தவிர, மாவட்டங்களில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. 37 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள் இறப்பு விகிதங்களில் கணிசமான அளவு அதிகரித்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment