கொரோனா மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கு - தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் மகன்கள் மீது வழக்குப்பதிவு

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட மரணத்தை மறைத்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு மேற்கொண்டதாக இரண்டு மகன்கள் மீது தொற்றுநோய்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட மரணத்தை மறைத்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு மேற்கொண்டதாக இரண்டு மகன்கள் மீது தொற்றுநோய்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 70 வயது முதியவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். கடந்த ஏப்ரல் 2ம் தேதி, இவர் சென்னை திரும்பியிருந்த நிலையில், சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மரணமடைந்தார். இதனையடுத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உடலை சுற்றி அவர்களது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கியிருந்தது.

உடலை பெற்றுக்கொண்ட அவர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு சென்று, உடலை சுத்தப்படுத்தி, அவர்களின் சடங்குகளுக்கு பிறகு புதைத்துள்ளனர். இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில், ராமநாதபுரம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்று பீதி காரணமாக ராமநாதபுரத்தில் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இறந்தவரின் 2 மகன்கள் மீது தொற்றுநோய்கள் சட்டம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பினால் தான் அந்த முதியவர் இறந்துள்ளதாக ஸ்டான்லி மருத்துவமனை தெரிவித்தும், அதுகுறித்த உண்மைகளை மறைத்ததாக இரண்டு மகன்கள் மீது 188, 269, 270, 278 of Indian Penal Code read with Section 51 (b) of Disaster Management Act, 58(4) and 134 of Tamil Nadu Public Health Act and Section 3 of Epidemic Diseases Act, 1897. பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாங்கள் இந்த விவகாரத்தில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. ஏப்ரல் 2ம் தேதி, காலை 7.15 மணியளவில் காய்ச்சல் மற்றும் அசதியாக இருக்கிறது என்று அவர் கூறவே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு நடந்தே அழைத்துப்போனோம். அங்கு டாக்டர் இல்லாததால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். சிறிது ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே காலை 11 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. சுவாசிக்க அவர் அதிகம் சிரமப்பட்டதால், ஐசியூவில் வைத்திருந்ததாகவும், அங்கு அவர் மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர். நாங்கள் சென்று பார்க்கும்போது அவர் சாதாரண துணியினால் தான் போர்த்தப்பட்டிருந்தார். இவர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் எந்தநேரத்திலும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று மூத்த மகன் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close