Advertisment

துபாயில் இந்திய பெண்களுக்கு நேர்ந்த சோகம் - ஊரடங்கு நேரத்திலும் தீராத கொடுமை

Indian women stranded in dubai : பார் டான்சர் வேலைக்காக துபாய் சென்ற இந்த பெண்களை, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் வளர்மதி மேலும் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, lockdown, women, bar dancers, dubai, chennai, human trafficking, sex exploit, national women council, external ministry, karnataka, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

coronavirus, lockdown, women, bar dancers, dubai, chennai, human trafficking, sex exploit, national women council, external ministry, karnataka, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

வேலைநிமித்தமாக துபாய்க்கு சென்ற தென்னிந்திய பார் டான்சர் பெண்கள், ஊரடங்கு காரணமாக இந்தியா திரும்ப முடியாத நிலையில், அவர்களுக்கு அங்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழ்நாடு, கேரளா ஆந்திரா. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்த 9 இளம்பெண்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜைரா பகுதியில் உள்ள பார்களில் பார் டான்சர் வேலைக்காக 3 மாதங்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் என்று கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு அவர்களுக்கு பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்லை. 6 மாதங்கள் கடந்தநிலையில், கொரோனா ஊரடங்கால் அங்கு இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த பார் டான்சர் பெண்களை சிறிய அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். மிகக்குறைந்த அளவிலேயே உணவு வழங்கப்பட்டது. பாலியல் ரீதியாகவும் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனர்.

பின் இவர்கள், சென்னையில் உள்ள தேசிய வீட்டுப்பணியாளர்கள் /புலம்பெயர் தொழிலாளர்கள் நலவாழ்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வளர்மதியை தொடர்பு கொண்டு தங்களது குறைகளை ஆடியோ வழியாக தெரிவித்திருந்தனர். முதலில் தமிழகத்தை சேர்ந்த பெண்ணும், பிறகு கேரளாவை சேர்ந்த பெண்ணும் தங்களது இந்த நிலையை தெரிவித்திருந்தனர்.

வளர்மதி, இந்த விவகாரத்தை, தேசிய பெண்கள் நல ஆணையத்திற்கு எடுத்துச்சென்றார். தேசிய பெண்கள் நல ஆணைய தலைவர் ரேகா சர்மாக, இதுதொடர்பாக, கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட்டிடம் புகார் அளித்திருந்தார். அவர் நடத்திய விசாரணையில், இந்த 9 இளம்பெண்களும் தவறான ஏஜென்ட் மூலம் சட்டத்திற்கு புறம்பாக துபாய் சென்றிருப்பது தெரியவந்தது.

அந்த ஏஜென்ட் பெயர் பசவராஜ் கலாசத் என்றும், அவர் குறிப்பிட்டிருந்த முகவரியில் எந்தவொரு கட்டடமும் இல்லை. அப்படி ஒரு நபரே இல்லை என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண்கள் தங்கியிருந்த அறையின் வைபை வசதி துண்டிக்கப்பட்டு விட்டது. அந்த பெண்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியை தற்போது நாடியுள்ளாக வளர்மதி தெரிவித்துள்ளார். பார் டான்சர் வேலைக்காக துபாய் சென்ற இந்த பெண்களை, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் வளர்மதி மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் தற்போது ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், கிளப்புகள் திறக்கப்படும், விமானங்கள் இயங்க துவங்கும். தங்களை விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்ததாக வளர்மதி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Lockdown Dubai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment