Advertisment

சென்னையில் ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா - 3 தீயணைப்பு வீரர்களுக்கு வைரஸ் உறுதி

Coronavirus Latest Updates:கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா - 3 தீயணைப்பு வீரர்களுக்கு வைரஸ் உறுதி

Covid-19 News Update: இந்தியாவின்  இரண்டாவது பொது முடக்க நிலை வரும் மே 3ம் தேதியுடன் முடிவடையும் தருவாயில், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை  1,000 ஐத் தாண்டியுள்ளது.  தற்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 7,695 பேர் குணமாகியுள்ளனர்.  நாட்டில் 31,332 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. tulladhநாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

பிளாஸ்மா சிகிச்சை முறையும் பரிசோதனைக்குரிய சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும், இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தலாமா என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதன்

பிளாஸ்மா சிகிச்சை செயல் திறனை மதிப்பீடு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின் அறிவியல்பூர்வ ஆதாரம் கிடைக்கும் வரையில், ஆராய்ச்சி மற்றும் சோதனை அடிப்படையிலான தேவைகளைத் தவிர மற்ற வகையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. உண்மையில், பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Live Blog

Coronavirus Updates: கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.



























Highlights

    22:51 (IST)29 Apr 2020

    கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் விவரம்

    நாடு முழுவதும் இன்று (ஏப்.29) பதிவான கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் விவரம்,

    22:48 (IST)29 Apr 2020

    ATM-ஐ ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் சுத்தம் செய்யவேண்டும் - சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களுக்கு நாள்தோறும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    வங்கிக் கிளைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

    மேலும், ATM மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

    ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகமூடி (Mask) அணிதல், அலுவலகங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் அவ்வப்பொழுது கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்

    5. கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளுக்காக தனியாக பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும்.

    22:30 (IST)29 Apr 2020

    12,000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரிட்டீஷ் ஏர்வேஸ்

    கொரோனா காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் அனைத்தும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 45 ஆயிரம் ஊழியர்களில் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலை காரணமாகவே சமீபத்தில் ஏற்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவு அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிதிப்பற்றாக்குறை காரணமாக விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    22:29 (IST)29 Apr 2020

    10க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள்

    ஜோதிகா சுட்டிக்காட்டி பேசிய தஞ்சை மருத்துவமனையில் பெண்ணை சீண்டிய பாம்பு..

    5 கட்டுவிரியன் பாம்பு உட்பட 10க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் பிடிபட்ட சம்பவத்தால் பரபரப்பு!

    22:14 (IST)29 Apr 2020

    குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

    பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

    காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    22:04 (IST)29 Apr 2020

    தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா

    சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

    எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையம் - ஒருவர், வியாசர்பாடி தீயணைப்பு நிலையம் - 2 பேர் பாதிப்பு

    மூவரும் பேசின் பிரிட்ஜ் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் தங்கியுள்ளனர்

    அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு

    உள்ளனர்

    21:41 (IST)29 Apr 2020

    காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள்

    இரு, நான்குசக்கர வாகனங்களில் சென்று கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்குவதை தவிர்த்து, வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று வாங்கிக்கொள்ள வேண்டும்

    - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள்

    21:12 (IST)29 Apr 2020

    ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள்...

    நாடு முழுவதும் மே 3 க்குப் பிறகு, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பல மாவட்டங்களுக்கு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்படும்.

    இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

    20:48 (IST)29 Apr 2020

    ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவு

    கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவு

    கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம்

    முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம்

    - யூஜிசி

    20:30 (IST)29 Apr 2020

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பசியால் வாடும் வட மாநில தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கக் கோரிய வழக்கு

    * விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    20:28 (IST)29 Apr 2020

    இன்றைய கொரோனா பாதிப்பு - தமிழக நிலவரம்

    மொத்த பாதிப்பு - 2,162

    இன்று உறுதியானவர்கள் - 104

    குணமடைந்தவர்கள் - 1,210

    உயிரிழப்பு - 27

    சிகிச்சை பெறுபவர்கள் - 922

    மொத்த பரிசோதனைகள் - 1,09,961

    இன்றைய பரிசோதனைகள் - 8,087

    பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் - 1,455

    பெண்கள் - 707

    20:27 (IST)29 Apr 2020

    முதல் 5 மாவட்டங்கள்...

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்!

    சென்னை - 768

    கோவை - 141

    திருப்பூர் - 112

    திண்டுக்கல் - 80

    மதுரை - 79

    20:27 (IST)29 Apr 2020

    மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்?

    20:19 (IST)29 Apr 2020

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வில் கிராமப்பகுதியில் பணியாற்றியதற்கான ஊக்க மதிப்பெண் வழங்குவது குறித்து மருத்துவ கல்வி இயக்குநரக தேர்வுக் குழு செயலர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    20:02 (IST)29 Apr 2020

    மத்திய அரசு தலையிட முடியாது

    காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை

    காவிரி மேலாண்மை ஆணைய நிர்வாக செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது

    காவிரி நீர் ஆணையம்,முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கை அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை

    -பொதுப்பணித்துறை

    19:43 (IST)29 Apr 2020

    காஞ்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா - முதல்முறையாக குக்கிராமத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. குன்றத்தூர் காய்கறி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா இருந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், வியாபாரியின் தாய் மற்றும் கர்ப்பிணி ஒருவர் உள்பட மொத்தம் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை 9 பேர் வீடு திரும்பிய நிலையில், 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    19:22 (IST)29 Apr 2020

    1,210 பேர் குணமடைந்துள்ளனர்

    கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 82 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,210 பேர் குணமடைந்துள்ளனர் - சுகாதாரத்துறை

    19:09 (IST)29 Apr 2020

    சென்னையில் 94...

    சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    19:08 (IST)29 Apr 2020

    104 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக அதிகரிப்பு என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    18:42 (IST)29 Apr 2020

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி

    ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி

    * தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி

    * மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

    18:26 (IST)29 Apr 2020

    தினமும் 1 லட்சம் ஏழைகளுக்கு உணவளிக்க திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உணவளிப்போம். தினமும் 1 லட்சம் ஏழைகளுக்கு உணவளிப்போம்.ஒன்றிணைவோம் பசியைப் போக்குவோம் என்று திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    18:01 (IST)29 Apr 2020

    பொது முடக்கத்தால் சிக்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு

    பொது முடக்கத்தால் சிக்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு செய்துவருவதாக தெரிவித்துள்ளது.வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    17:21 (IST)29 Apr 2020

    சென்னையில் 6 மண்டலங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு - முதல்வர் அறிவிப்பு

    சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எந்தெந்த தொழில்களையும் பணிகளையும் தொடங்கலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவாட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

    16:49 (IST)29 Apr 2020

    கரூரில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 5 பேர் வீடு திரும்பினர்

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றில் இருந்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    16:47 (IST)29 Apr 2020

    ஏ.சி. ஃபிரிட்ஜ் வீட்டு உபயோக பொருட்களின் சர்வீஸ் சென்டர்களை திறக்க கோரி வழக்கு

    கொரோனா பொது முடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் மக்களின் தேவைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏ.சி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் சர்வீஸ் சென்டர்களை மட்டும் திறக்க முடியுமா என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு தமிழக அரசு மே 25ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டது.

    16:31 (IST)29 Apr 2020

    பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னை மாநகராட்சியில் தனிமைப்படுத்டப்பட்ட பகுதிகளில் 1.75 லட்சம் பேர் இருகிறார்கள். சென்னையில் கொரோனா பரிசோதனையை 2000 வரை அதிகரிக்க உள்ளோம். சென்னையில் தனிமனித சமூக இடைவெளி கடைபிடிப்பதை இன்னும் கடுமையாக்க உள்ளோம். சென்னையில் விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மூடப்படும்” என்று தெரிவித்தார்.

    15:51 (IST)29 Apr 2020

    மே-3-க்குப் பிறகு மேலும் 2 வாரத்துக்கு பொது முடக்கத்தை நீட்டிக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு

    கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அதற்குப் பிறகு மேலும் 2 வாரத்துக்கு பொது முடக்கத்தை நீட்டிக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    15:44 (IST)29 Apr 2020

    மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

    கொரோனா பொது முடக்கம் மே 3-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மே 2-ம் தேதி தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு,

    15:39 (IST)29 Apr 2020

    சிவகங்கை, சேலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 13 பேர்

    சிவகங்கை, சேலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த தலா 3 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

    15:36 (IST)29 Apr 2020

    தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    வானிலை ஆய்வு மையம்: தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

    15:31 (IST)29 Apr 2020

    மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் - ஸ்டாலின் கண்டனம்

    ஜல்சக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில், காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல் - ஸ்டாலின் கண்டனம்

    மத்திய அரசு வெளியிட்ட அரசிதழை திரும்ப பெற வேண்டும், தவறும் பட்சத்தில், மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய பேரமைப்புகளை ஒன்று சேர்த்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் - ஸ்டாலின்

    உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

    14:45 (IST)29 Apr 2020

    தமிழக அரசின் அம்மா உணவகம் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு

    தமிழக அரசின் சார்பில் செயல்படும் அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அம்மா உணவகம் திட்டம் தனித்துவம் மிக்கதாக செயல்படுகிறது; மொத்தம் 85 லட்சம் பேர் அம்மா உணவகம் மூலம் பயனடைகின்றனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    14:39 (IST)29 Apr 2020

    லாக்டவுன் முடிந்தால் 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் - சிபிஎஸ்இ திட்டவட்டம்

    சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பில் ஏற்கனவே சில பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில், லாக்டவுன் முடிந்தால் 10 ஆம் வகுப்பில் மீதம் இருக்கும் பாடங்களின் தேர்வுகளும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் கட்டாயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

    14:03 (IST)29 Apr 2020

    ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் - ராஜேந்திர பாலாஜி

    விருதுநகர் மாவட்டம் இந்துசமயஅறநிலைத்துறை திருக்கோவில்களில் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அர்ச்சகர்கள் பூசாரிகள் பணியாளர்களுக்கு தலா 20கிலோ அரிசி வீதம் 517 பணியாளர்களுக்கு அமைச்சர் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், கொரோனா தொற்றால் அனைவரும் விலகி இருப்போம் என கூறும் நிலையில் ஸ்டாலின் மட்டும் 'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் அரசியல் ஸ்டாலின் செய்வதாக தெரிவித்தார்.

    " id="lbcontentbody">

    13:50 (IST)29 Apr 2020

    மத்திய அரசு ஊழியர்கள் கட்டாயம் 'ஆரோக்யா சேது' பயன்படுத்த வேண்டும்- உத்தரவு

    ஆரோக்யா சேது செயலியை  கட்டாயம் தங்கள் மொபைல் போன்களில் அனைத்து மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் "உடனடியாக" பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது .  செயலியில், 'பாதுகாப்பானது' அல்லது 'குறைந்த ஆபத்து'  என்ற நிலையைக் காண்பிக்கும் போது மட்டுமே பணியாளர்கள் அலுவலகத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

     

    13:44 (IST)29 Apr 2020

    அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி இயங்க வேண்டும் - நிதின் கட்காரி

    நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்களை சுமுகமான முறையில் எடுத்துச் செல்வது அவசியம் என்பதால் மாநில/ யூனியன் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்து, தடையின்றி நடைபெறும் வகையில், உடனடி நடவடிக்கை மிக விரைவில் எடுக்க வேண்டும் என்று நிதின் கட்காரி கேட்டுக்கொண்டுள்ளார்

    13:42 (IST)29 Apr 2020

    இல்லங்களில் இருந்தபடியே அஞ்சல் சேவை பெறுவதற்கான அலைபேசி செயலி - “போஸ்ட் இன்ஃபோ”

    கோவிட்-19 பொது முடக்கக் காலத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ்சல் துறையின் அலைபேசி செயலி “போஸ்ட் இன்ஃபோ” அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்திலுள்ள - இல்லங்களில் இருந்தபடியே அஞ்சல் சேவை பெறுவதற்கான அவசரத் தேவை - இணைப்பு மூலம், இந்தச் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்

    13:24 (IST)29 Apr 2020

    கோயம்பேடு காய்கறி சந்தை மாற்றுவதை தவிர்க்கலாம் - வியாபாரிகள் சங்கம்

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை இடமாற்றம் செய்தால், காய்கறிகள் வீணாகி நஷ்டம் ஏற்படும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தை இடமாற்றத்திற்கு பதிலாக ஒரு நாள் அல்லது 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு கிருமிநாசினியை தெளிக்கலாம் என்றும் கருத்து.  

    12:34 (IST)29 Apr 2020

    தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது பீலா ராஜேஷ் புகார்

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தன்மீது திட்டம்போட்டு அவதூறு பரப்பியவர்கள் மீது சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் புகார் அளித்துள்ளார். குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று பிப்ரவரி மாதத்தில் கண்டறியப்பட்டதாகவும், அனால் மார்ச் மாதம் என மாற்றிக் கூறியதாகவும் மர்ம நபர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பாட்டது.          

    12:23 (IST)29 Apr 2020

    இளைஞரணி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நலத்திட்ட உதவிகள் - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    ஊரடங்கினால் வறுமையில்வாடும் மக்களுக்கு இளைஞரணி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நலத்திட்ட உதவிகள் குறித்து மாவட்ட-மாநகர் அமைப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிபொருட்களை வழங்கியுள்ள இளைஞரணி தோழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

    12:17 (IST)29 Apr 2020

    கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது

    தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் இருப்பதாக குறிப்பிட்ட முதல்வர், கொரோனா  ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  

    12:14 (IST)29 Apr 2020

    சென்னையில் உணவு டெலிவரி ஊழியருக்கு கொரோனோ

    சென்னையில் உணவு டெலிவரி செய்யும் 26 வயது இளைஞ ஊழியருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.  

    12:12 (IST)29 Apr 2020

    பிறமாநில தொழிலாளர்களை முகாம்களில் தங்க வைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன - முதல்வர்

    முதல்வர் பழனிசாமி: சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிறமாநில தொழிலாளர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

    11:59 (IST)29 Apr 2020

    போர்க்கால நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது - முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி: போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது. தமிழகத்தில் அந்த நிலை இல்லை என்று கூறினார்.

    11:57 (IST)29 Apr 2020

    ரேஷன் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - முதல்வர் உத்தரவு

    முதல்வர் பழனிசாமி: ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    11:55 (IST)29 Apr 2020

    காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளி உறுதிப்படுத்த ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    முதல்வர் பழனிசாமி: காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருமி நாசினி அனைத்து பகுதிகளிலும் தெளிக்க வேண்டும். நகர பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை தினமும் 3 முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    11:52 (IST)29 Apr 2020

    ரேஷன் கடை பொருட்கள் பெற டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் - முதல்வர்

    முதல்வர் பழனிசாமி: ரேஷன் கடை பொருட்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். டோக்கன் கொடுக்கின்ற நோக்கமே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகத்தான். டோக்கன் வழங்கும் போதே அதுகுறித்த வழிமுறைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    11:52 (IST)29 Apr 2020

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் மூவருக்கு கொரோனா

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக,சென்னை கோயம்பேட்டில் 3,100 கடைகளில் 250 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்திருந்தது. அனுமதிக்கப்பட்டுள்ள 250

    கடைகளிலும் மொத்த விற்பனை மட்டுமே நடைபெற வேண்டும். 

    11:48 (IST)29 Apr 2020

    சென்னை உட்பட 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் 5 மணி வரை கடைகள் திறப்பு - முதல்வர்

    சென்னை கோவை மதுரையில் நாளை மட்டும் அத்தியாவசிய கடைகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி. மே 1ம் தேதி முதல் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு.

    11:48 (IST)29 Apr 2020

    விவசாயப் பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களை தடுக்க கூடாது - முதல்வர் உத்தரவு

    முதல்வர் பழனிசாமி: விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது. விவசாய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

    11:45 (IST)29 Apr 2020

    விவசாய விதை பொருட்களை வைப்பதற்கு கிடங்குகளை தயார் நிலையில் வைக்க முதல்வர் உத்தரவு

    முதல்வர் பழனிசாமி: விவசாய விதை பொருட்களை வைப்பதற்கு கிடங்குகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். உணவு பதப்படுத்துதல், உற்பத்தி ஆலைகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

    11:44 (IST)29 Apr 2020

    100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தும் போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க முதல்வர் அறிவுறுத்தல்

    முதல்வர் பழனிசாமி: கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தும் போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 100 நாள் பணியின் போது, கூட்டம் சேராமல் சரியாக பிரித்து வேலை வழங்க வேண்டும். 58 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், முகக்கவசம்,  சமூகவிலகல்  கட்டயாம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  

    11:40 (IST)29 Apr 2020

    நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது - முதல்வர்

    முதல்வர் பழனிசாமி: நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது. பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு படிப்படியாக அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.

    11:38 (IST)29 Apr 2020

    விவசாய பணிகளை யாரும் தடுக்க கூடாது - முதலவர் பழனிசாமி

    மத்திய அரசின் தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்கள், விவசாய பணிகளுக்கு முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைப்பொருட்கள் கொண்டுசெல்வதை யாரும் தடுக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 

    11:37 (IST)29 Apr 2020

    அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையில்தான் உள்ளது - முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி: தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையில்தான் உள்ளது. கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரிவித்துள்ளார்.

    11:35 (IST)29 Apr 2020

    100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயது மேற்பட்டவர்களை தவிர்க்கலாம் - முதல்வர்

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் மே 3-ம் தேதிக்குப் பிறகு 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை சில நாட்களுக்கு முன் தமிழக அரசு  வெளியிட்திருந்தது. இந்நிலையில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி தரலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

    11:30 (IST)29 Apr 2020

    அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும் - முதல்வர் அறிவுறுத்தல்

    முதல்வர் பழனிசாமி: அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

    11:28 (IST)29 Apr 2020

    தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும் உள்ளே செல்லவும் கூடாது - முதல்வர்

    முதல்வர் பழனிசாமி: தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும் கூடாது. உள்ளே செல்லவும் கூடாது. தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    11:19 (IST)29 Apr 2020

    குடிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

    ஊரடங்கு காலத்தில், குறைந்தளவு சமூக விலகலை கடைபிடிப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்கு வரும் மக்கள் குடிகளை பயன்படுத்துமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.     

    11:14 (IST)29 Apr 2020

    மே-3 க்கு பிறகு என்ன நடவடிக்கை ? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மே-3க்குப் பிறகு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    11:10 (IST)29 Apr 2020

    இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 1000-க உயர்வு

    இந்தியாவின்  இரண்டாவது பொது முடக்க நிலை வரும் மே 3ம் தேதியுடன் முடிவடையும் தருவாயில், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை  1,000 ஐத் தாண்டியுள்ளது.  தற்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 7,695 பேர் குணமாகியுள்ளனர்.  நாட்டில் 31,332 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,400 பேர் உயிரிழந்துள்ளனர்

    Coronavirus Updates: மிகவும் லேசான அறிகுறிகள் உள்ள அல்லது அறிகுறிகளுக்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதற்கான வசதி உள்ளவர்கள், அவ்வாறே இருப்பதற்கான வாய்ப்பைத் தேர்வு செய்யலாம்.

    கொரோனா வைரஸ் பாதிப்புகளை சமாளிக்கும் உடனடி தேவைகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 1.5 பில்லியன் டாலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட்டது. நோய்க் கட்டுப்பாடு, நோய்த் தடுப்பு மற்றும் ஏழைகளுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அளித்தல், குறிப்பாக பெண்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுவினருக்கு உதவிகள் அளித்தல் ஆகியவற்றுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment