Advertisment

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 1 கோடி... பொதுமக்களுக்கு வைகோ முக்கிய வேண்டுகோள்!

அனைவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொருவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus outbreak MP Vaiko gives rs 1 crore from MP fund

coronavirus outbreak MP Vaiko gives rs 1 crore from MP fund

coronavirus outbreak MP Vaiko gives rs 1 crore from MP fund : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1 கோடியை எம்.பி. வைகோ, கொரோனா தடுப்புப் பணிக்கு கொடுத்து உதவுவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

மேலும் படிக்க : என்ன ஒரு அறிவு? அதனால் தான் கேரளா டாப்…

இந்தியா முழுவதும் தீவிரமாக, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளுக்கு, மருத்துவர்களுக்கு, மருத்துவ மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் நிதியை அளித்து வருகின்றனர்.

நேற்று ராஜாஜி மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக எம்.பி. சு வெங்கடேசன் 56 லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கினார். இந்நிலையில் இன்று, ராஜ்யசபை உறுப்பினர் மற்றும் மதிமுக கட்சியின் தலைவருமான வைகோ, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 1 கோடியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : கொரோனா சிகிச்சை உபகரணம் வாங்க ரூ. 56.17 லட்சம்: சு.வெங்கடேசன் எம்.பி.

மக்களுக்கு வேண்டுகோள்

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “4 லட்சம் மக்களை பாதித்து, 20 ஆயிரம் உயிர்களை கொள்ளை கொண்டுள்ளது கொரோனா. இது உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது. அறிவியல் சாதனைகள் பல படைத்த நாடுகளே இதனை எதிர்கொள்வது எப்படி என திணறி வருகிறது. அபாயகரமான எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு, பொதுமக்கள் தெருவில் உலவுவது பேராபத்தில் போய் முடியும். மக்கள் தெருக்களில் கூடுவது கடமைகளை செய்யும் மருத்துவ பணியாளர்கள், காய்கறிகள் பால்பொருட்கள் விநியோகம் செய்பவர்களுக்கு இடையூறாக முடிந்துவிடுகிறது. அனைவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொருவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Mdmk Chief Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment