Advertisment

கோழிகளுக்கு கொரொனா? வதந்தி பரப்பினால் பாய்கிறது நடவடிக்கை

கோழிகளுக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus rumors, coronavirus rumors spreads man arrested, கொரொனா வைரஸ் வதந்தி, கொரொனா வைரஸ் வதந்தி பரப்பியவர் கைது, கரூர், நாமக்கல் போலீஸ், karur man arrested for spreads coronavirus rumors, namakkal police arrested a man for coronavirus rumor spreads, namakkal, chicken meat, chicken farms, coronavirus social media rumors

கொரொனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழக அரசு கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொரொனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளையும் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதனிடையே, கொரொனா வைரஸ் பற்றி தினமும் ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த வதந்திகள் கொரொனா வைரஸைவிட பயங்கர அச்சுறுத்தலாக உள்ளது என்பது பலருக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.

கொரொனா வைரஸ் கோழிகள் மூலம் பரவுகிறது என்றும் கோழிகள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வதந்தி பரவியதால் கோழி இறைச்சி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.180-க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.40 - 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு குறைவான விற்பனை செய்யப்பட்டாலும் வதந்தி பரவியதால் மக்கள் சிக்கனை வாங்க பயப்படுகிறார்கள். இதனால், மதுரை, தூத்துக்குடி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோழி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோழி இறைச்சி வியாபாரிகளும் கோழி வளர்ப்பு பண்ணையாளர்களும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர்.

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கோழிகளுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் கடந்த மாதம் வதந்தி பரவியது.

இப்படி தவறாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன செயலாளர் சுப்பிரமணி தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

கோழி இறைச்சி மூலம் கொரொனா பரவுகிறது என தவறாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை களம் இறங்கியது. வதந்தி பரப்பியவர்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீஸார், கரூர் மாவட்டம், தென்னிலையைச் சேர்ந்த பெரியசாமி என்பவரை கைதுசெய்தனர். பெரியசாமி அவருடைய வாட்ஸ் அப் எண்ணிலிருந்து பொய்யான தகவலை பரப்பியது தெரியவந்தது. அவரை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Namakkal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment