Advertisment

ஆஸ்ரம் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம்... ரூ.6 கோடி இழப்பீடு கோரி ரஜினி குடும்பத்தினர் வழக்கு!

ஆஸ்ரம் பள்ளியின் நற்பெயரை கலங்கபடுத்தியதாக  நில உரிமையாளர் ரூ.6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி ரஜினிகாந்த் குடும்பத்தினர் வழக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைக்கேடு

புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைக்கேடு

ஆஸ்ரம் பள்ளியின் நற்பெயரை கலங்கபடுத்தியதாக  நில உரிமையாளர் ரூ.6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீராகவேந்திரா கல்வி சங்க செயலாளர் ஐஸ்வர்யா தனுஷ் ( நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ) தாக்கல் செய்த சிவில் வழக்கில், ஸ்ரீராகவேந்திரா கல்வி சங்கம் கடந்த 1991-ம்  பதிவு செய்யப்பட்டது. சங்கத்தின் கீழ் ஆஸ்ரம் என்ற பெயரில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய இடங்களில் பள்ளிகள் உள்ளன.

கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பள்ளி கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட்டது. இப்பள்ளி சுமார் 33086 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. கிண்டியை சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான இடத்தை குத்தகை அடிப்படையில், அவரிடமிருந்து ராகவேந்திரா கல்வி சங்கம் பெற்றது. சதுர அடிக்கு ரூ. 15.65 வீதம் ரூ 2.40 லட்சம் வாடகையாக தர ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த மே மாதம் வரை வெங்கடேஸ்வரலுவுக்கு தரவேண்டிய வாடகை எவ்வித பாக்கியும் இல்லாமல் தரப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி, மாலை 4. 30 மணிக்கு வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது ஆட்கள் இந்த பள்ளியின் நுழைவுவாயிலை மூடி பள்ளி மற்றும் காலியிடத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

மறுநாள் பள்ளியை திறக்க சென்றபோது, பள்ளியின் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் வெங்கடேஸ்வரலு மற்றும் அவரின் வாரிசுகளும் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் அவர்கள் அளித்த பேட்டியில், பள்ளி வாடகையை செலுத்தவில்லை என்றும் அதனால் பள்ளி கட்டிடத்தை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறியுள்ள்னர்.

கடந்த 2005-ம் அந்த இடத்தில் பள்ளியை ஆரம்பித்தபோது சுமார் ரூ.5 கோடிக்கு மேல் செலவு செய்து தொழிற்சாலை இடமாக இருந்ததை பள்ளி வளாகமாகவும் வகுப்பறையாக  மாற்றினோம். பள்ளி நிர்வாகம் சார்பில் இட உரிமையாளருக்கும் எந்த பாக்கியும். வைக்காத நிலையில் பள்ளி வளாகத்தை சீல் வைத்தது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எங்கள் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக இடத்தின் உரிமையாளர்கள் வெங்கடஷ்வரலு, பத்மா, பிரபாகர், பாலாஜி உள்ளிட்ட 5 பேர் நஷ்ட ஈடு தொகையாக ஒரு கோடியும், கல்வி சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.5 கோடி தர வெங்கடேஸ்வரலு மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது ஆட்கள் ஆஸ்ரம் பள்ளிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது.

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment