Advertisment

பேனர் வழக்கு: ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றம் உத்தரவு

Chennai High Court ordered to police in Banner Case: பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான வழக்கில் பிரதான எதிரியான ஜெயகோபாலை இது வரை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்தும், விசாரணை குறித்த அறிக்கையை சென்னை மாநகர காவல் ஆணையர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai High Court ordered to police in Banner Case, Subhashree died by fall banner, accused jayagopal, சுபஸ்ரீ, பேனர் வழக்கு, நீதிமன்றம் உத்தரவு, Chennai High Court questioned Police department, subhashree death, banner accused jayagopal, Madras High court, Banner case

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், பேனர் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை திமுகவில் அமல்படுத்தப்படுகிறது எனவும், சுபஸ்ரீ வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதியப்படவில்லை எனவும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் வாதிட்டார்.

சென்னை மாநகராட்சி சார்பிலும், காவல் துறை சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி சார்பில் 5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதான எதிரியான ஜெயகோபாலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, பேனர் வைக்க கூடாது என கட்சியினரை அறிவுறுத்தி, ஆளுங்கட்சி சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல் துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜெயகோபாலை எப்போது பிடிப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நேரில் சென்று பேனர்களை எடுக்கவில்லையே தவிர மற்றபடி அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்துவிட்டோம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி மற்றும் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை பதிவு செய்த நீதிபதிகள், ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையருக்கும் உத்தரவிட்டனர்.

மொத்த வழக்கையும் காவல் ஆணையர், கண்காணித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

முன்னதாக, டிஜிட்டல் பேனர் பிரிண்டர்ஸ் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பண்டிகை காலம் என்பதால் கடைகள் சார்பில் விளம்பரங்கள் வைக்கப்படும். அவற்றை அச்சிட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு, அனுமதி வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

Chennai High Court Tamilnadu Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment