ரத்தாகிறதா ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமம்?

ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் பயணித்தால் அவர்களை பணி இடை நீக்கம் செய்யப்படுகின்றனர்

Madras High court on Nadigar Sangam Election

மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் அரசுக்கு உத்தரவிட கோரியும் சென்னையை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர், மற்றும் சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர் கூட ஹெல்மெட் அணிவதில்லை எனவும், டெல்லி பெங்களூரில் பேன்ற நகரங்களில் இதை அமல்படுத்தும் போது ஏன் தமிழகத்தில் அமல்படுத்த முடியவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு உரிய முறையில் அமல்படுத்துவதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 6 மாதங்களில் ஹெல்மெட் அணியதாதது தொடர்பாக 4 லட்சம் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களிடம் இருந்து 100 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பான சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் ஓட்டுனர் உரிமைத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இதற்கு நீதிபதிகள், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய சட்டத்தில் இடமில்லை எனவும் சஸ்பெண்ட் வேண்டுமானால் செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும், வாகனத்தை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் வாகனசட்ட விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகின்றன என அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார்.

அப்போது நீதிபதிகள், காவல்துறையினரும் ஹெல்மெட் அணியவதில்லை,
அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், ஹெல்மெட் அணியாத
காவல்துறையினர் பயணித்தால் அவர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தல், ஹெல்மெட் கட்டாயமாக்கி பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறை படுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

Get the latest Tamil news and Courts news here. You can also read all the Courts news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Helmet driving licence cancel madras high court

Next Story
எட்டு வழிச்சாலை திட்டம்: சென்னை ஐகோர்ட் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்புTamil nadu live updates news in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com