Advertisment

பாலின நடுநிலை கழிவறைகள்: கல்வி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

LGBTQIA உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
பாலின நடுநிலை கழிவறைகள்: கல்வி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

சென்னை உயர் நீதிமன்றம்

LGBTQIA உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

LGBTQIA+ உறுப்பினர்களின் நலனுக்காக பள்ளிகளில் பாலின-நடுநிலை கழிவறைகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

publive-image

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக பள்ளிக் கல்வி ஆணையரைப் பாராட்டினார்.

"பள்ளி மாணவர்களுக்கு பாலின-நடுநிலை கழிவறைகள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அட்வகேட் ஜெனரல் மேலும் சமர்பித்தார்." இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, “LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பாலினத்தைக் குறிப்பிடும் வகையில், விண்ணப்பப் படிவங்களில் ஆண், பெண் பாலினத்தைத் தவிர தேவையான நெடுவரிசைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று நீதிபதி கூறினார்.

மாணவர்களின் கல்விப் பாடத்திட்டத்தில், LGBTQIA+விற்கு சமூகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் விழிப்புணர்வை ஆகியவற்றை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“இதன் செயல்முறை தொடரும், மாணவர் சமூகத்தினரிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் ஆண்டுகளில் படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். LGBTQIA+ சமூகத்தின் விழிப்புணர்வு தகவல்களை பாடப்புத்தகங்கள் மூலம் கொண்டு கற்பிக்கப்படும் என அட்வகேட் ஜெனரல் சமர்பித்தார்,” என்று நீதிமன்றம் கூறியது.

ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கத்தில் பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, பாலின விளக்கக்காட்சி, பாதிப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள், ஆகியவை LGBTQIA+ கருத்துக்களுடன் சேர்க்கப்படும் என்று அரசாங்கம் சமர்ப்பித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamilnadu Madras High Court Lgbtqa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment