Advertisment

போஸ்டர் அரசியல்... திராவிடக் கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் பா.ஜ.க

கொடி தூக்கும் போஸ்டர் கலாச்சாரம்; உலகம் போற்றும் தலைவன் வருக வருக என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு போஸ்டர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Covai BJP followers Welcome to Annamalai with posters

கோவை ரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

கோவை மாநகர பகுதியில் தி.மு.க மற்றும் பா.ஜ.க.,வினர் மாறி மாறி போட்டி போட்டு கொண்டு போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

Advertisment

குறிப்பாக இந்தப் போஸ்டர்களால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று திரும்பி உள்ளார்.

இதனை வரவேற்கும் விதமாக கோவை ரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் உலகம் போற்றும் தலைவன் வருக வருக வெல்க வெல்க என பா.ஜ.க.,வினர் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள் வார்த்தை போரிலும், போஸ்டர்களில் சில வாக்கியங்களை அச்சடித்து ஒட்டுவது தற்போது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment