இவர்கள் அனைவரும், 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
Covaxin Vaccine Test: இந்தியா முழுவதும் 12 இடங்களில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி சோதனை நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மட்டும் இந்த சோதனை நேற்று (23.7.20) முதல் தொடங்கியது.
Advertisment
SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இதுவரை நிலையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் நாடுகள் திண்டாடி வருகின்றன.
ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும், பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. கோவேக்சின் மருந்தில் 2 விதமான சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் 12 இடங்களில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி சோதனை நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மட்டும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
காட்டாங்குளத்தூர் SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பரிசோதிக்க தொடங்கியது.
முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது
இவர்கள் அனைவரும், 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil