Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 6.57 லட்சம் பேருக்கு கொரோனா - தமிழகமே உஷார் ப்ளீஸ்!

இந்தியாவில்,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,100 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Covid-19 vaccine tracker, Oct 5: India hopes to vaccinate 20-25 crore people by July next year

A health worker takes a nasal swab sample to test for COVID-19 at a government hospital in Unchahar, Raebareli district, Uttar Pradesh, India, Monday, Sept. 28, 2020. India’s confirmed coronavirus tally has reached 6 million cases, keeping the country second to the United States in number of reported cases since the pandemic began. (AP Photo/Rajesh Kumar Singh)

Tamil Nadu Coronavirus Daily Bulletin: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,819  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,58,191 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

உலக அளவில் கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 6.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழக மக்களிடம் கோவிட்டுக்கு ஏற்ற நடத்தை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக  முக்கியமாக கருதப்படுகிறது.

இந்தியாவில்,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,100 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது . கடந்த எட்டு நாட்களாக 50 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

 

குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 2,520 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 7,30,272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.31 விழுக்காடாக உள்ளது .

தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16,441 ஆக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,156 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,79,216 ஆக இருக்கிறது. மொத்த தொற்று எண்ணிக்கையில் 5.44 % பேர் தான் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

உயிரிழப்பு நிலவரம் : கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 12 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 7  பேரும், அரசு மருத்துவமனையில் 5 பேரும் இதில் அடங்குவர். உயிரிழந்த அனைவருக்கும் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள்  என்பது குரிபிடத்தக்கது

கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,478 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 447 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 85.01% பேர் ஆகும்.

 

சென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு, இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,668 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,098.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :

தமிழகத்தில், சமீபத்திய தகவலின் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, கோயம்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக உள்ளது. சில, நாட்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 7 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டன.

 

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment