Advertisment

50% கொரோனா பாதிப்பு, இந்த 5 மாவட்டங்களில்!

தமிழகம், மகராஷ்டிராவை விட கர்நாடக மாநிலத்தில்  தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சிஅடைந்து வருகிறது.   

author-image
salan raj
New Update
Corona Virus Latest Tamil News

Corona Virus

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,27,026 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

publive-image

 

உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 15, அரசு மருத்துவமனைகளில் 15 என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். இதில், ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள்  28 பேர் என்பது குரிபிடத்தக்கது .

மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 71,797 பேருக்கு செய்யப்பட்டுள்ளது .  நேற்று, கோவிட்-19 க்கான பரிசோதனை எண்ணிக்கை 69,484 ஆக இருந்த நிலையில், தொற்று எண்ணிக்கை 2,511 ஆக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் , கொரோனா நோய்த் தொற்று காரணமாக 88   பேர் உயிரிழக்கின்றனர்.  இந்தியாவில் 21 மாநிலங்கள், இந்த தேசிய சாசரியை விட்ட குறைவாக கொரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளன.

 

 

குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  3,644 ( நேற்றைய எண்ணிக்கை 3,848)  பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,94,880 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 95.57%  குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மொத்தம் 74,91,513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோருக்குமான இடைவெளி 69 லட்சத்தைத் தாண்டியுள்ளது (69,21,055).

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20,994 ஆக குறைந்துள்ளது.

 

 

தற்போது இந்தியாவில் 5,70,458 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்  ( மேலே உள்ள படம்). நாட்டில் இந்த நோயால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 6.97 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம், மகராஷ்டிராவை விட கர்நாடக மாநிலத்தில்  தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சிஅடைந்து வருகிறது.

publive-image Source : மத்திய அரசு

 

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 686 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 248, சேலம் – 110, செங்கல்பட்டு –145, திருவள்ளூர் – 138 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

 

ராமநாதபுரம், பெரம்பலூர், தென்காசி ,புதுக்கோட்டை , அரியலூர், ஆகிய மாவட்டங்களில் 10க்கும் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது.

பல நாட்களாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக பதிவு செய்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 29 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது .

சென்னையில் இன்று 686 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,00,533 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,005 ஆகும்.

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment