Advertisment

மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த குடிமக்கள் எத்தனை சதவீதம்?

சென்னையில் அதிகபட்சமாக 70.6% மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த குடிமக்கள் எத்தனை சதவீதம்?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எத்தனை சதவீதம் பேர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக 70.6% மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்றுநோய் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு, உலக நாடுகள் பலவும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜனவரி மத்தியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ரத்ஹ அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள 45 வயதினருக்கு மேற்பட்டவரக்ளுக்கு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாம தொற்று வேகமாக அதிகரித்ததையடுத்து, மத்திய அரசு நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 வயது மேர்பட்டவர்கள் அணைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டில் கோவிட் 19 தடுப்பூசியை ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மாவட்ட வாரியாக எத்தனை சதவீதம் பேர் போட்டுக்கொண்டுள்ளனர் என்ற தரவுகள் வெளியாகி உள்ளது. இந்த தரவுகளில், 60வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் சதவீதம் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறு படுகிறது. கிராமப்புற மாவட்டங்களில் இந்த சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது.

மே 10ம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ​​தடுப்பூசி போட்டுக்கொண்ட 60வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கையை கணக்கிடும்போது, ​​சென்னைக்கும் பிற பகுதிகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

பெரும்பான்மையான கிராமப்புற மாவட்டங்களில், 10%க்கும் குறைவான முதியவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். சென்னையின் மக்கள்தொகையில் முதியவர்களில் 70.6% பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிகமான மூத்த குடிமக்கள் சதவீதத்தில் சென்னை முன்னிலையில் உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், கோவையில் 26.2% தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

பெரிய அளவில் நகர்ப்புற மக்கள்தொகை இல்லாத நீலகிரி மாவட்டத்தில் விதிவிலக்காக 43.2% தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மதுரை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் மற்றும் விருதுநகர் ஆகியவை 15% க்கும் அதிகமான தடுப்பூசி போட்ட முதியவர்களைக் கொண்டுள்ளது.

மற்ற நான்கு மாவட்டங்களில் 12% முதல் 15% வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் 10% க்கும் குறைவாக போடப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட காரணிகளைப் பயன்படுத்தி, 2018 மாதிரி பதிவு முறை அடிப்படையில், மே 2020 இல் வெளியிடப்பட்ட விவரங்கள் மூலம் மாவட்ட மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

தடுப்பூ போடுவதில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் மோசமான செயல்திறன் குறித்து ஏற்கனவே கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில், இந்த தரவுகள் வந்துள்ளது. தமிழகத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களின் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளதை இந்த தரவுகள் காட்டுகிறது.

மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசி விநியோகங்களைப் பார்த்தால், மே 7ம் தேதி நிலவரப்படி தமிழகம் 12.44% பேருக்கு மட்டுமே தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.

தமிழகம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைந்த விநியோகத்தைப் பெற்றுள்ளது. ஒடிசா (96%), கேரளா (95%) மற்றும் மேற்கு வங்கம் (95%) போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​மே 7ம் தேதி வரை (வீணடிக்கப்படுவது உட்பட) தடுப்பூசிகளின் ஒதுக்கீட்டில் 85% தடுப்பூசிகளை தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Covid 19 Vaccine Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment