Advertisment

பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு - அமைச்சர் எச்சரிக்கை

இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் செய்யப்படும் சோதனைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நாளொன்றுக்கு 1,50,000-க்கு குறையாமல் சோதனைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Covid19 infections will rise after pongal holidays

Covid19 infections will rise after Pongal holidays: கடந்த வாரம் தொடர்ந்து நாளொன்றுக்கு 2000 கொரொனா தொற்றுகள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று 9 மட்டுமே அதிகரித்துள்ளது. இன்றும் இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும் வருகின்ற நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் செய்யப்படும் சோதனைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நாளொன்றுக்கு 1,50,000-க்கு குறையாமல் சோதனைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தொற்று கூடுதலாக இருந்தாலும் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 1,91,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட 8900 படுக்கைகளில் மட்டுமே பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே படுக்கை பற்றாக்குறை ஆகிவிடும் என்ற கவலை வேண்டாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

20 நாள்களுக்கு பிறகு குறைந்த கொரோனா கேஸ்கள்… ஆனால் சென்னையில் அதிகரிப்பு

படுக்கைகள், ஆக்ஸிஜன், மருந்துகள் எல்லாம் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மருத்துவ கட்டமைப்பு தயார் நிலையில் உள்ளது என்பதால் கவலை இல்லை என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 60 வயதிற்கு மேற்பட்ட 90 லட்சம் பேர் இன்னும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவில்லை. அவர்களை இலக்காக வைத்து தான் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை மட்டுமின்றி இதர சேவை துறையினரும் ஒவ்வொரு முதியவர்களாக அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த சிரமத்தை தவிர்க்க இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாத முதியவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார்.

‘தினசரி கொரோனா பாதிப்பை பார்க்க வேண்டாம்; அட்மிட் எண்ணிக்கையை பாருங்கள்’ – மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment