Advertisment

தமிழகத்தில் ஒரே நாளில் 59 பேர் மரணம்: மேற்கு, தெற்கு மாவட்டங்களிலும் அதிகரிக்கும் கொரோனா

சென்னைக்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் நோய் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
covid19 chennai new cases

புகைப்படம் : நிர்மல் ஹரிந்தரன்

covid19 second wave : வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் மொத்தம் 12,652 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 89,428-ஐ எட்டியது. நேற்று ஒரே நாளில் 59 நபர்கள் உயிரிழக்க கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,317 உயர்ந்தது. மொத்தமாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 10.37 லட்சத்தை தொட்டது. மிகவும் மோசமான பாதிப்பை அடைந்த மாவட்டமாக சென்னை உள்ளது.

Advertisment

மொத்தமாக நேற்று (22/04/2021) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,780 ஆனது. 27 மாவட்டங்களில் மூன்று இலக்கங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவானது. அதில் 20 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 என்ற அளவில் பதிவானது. இறப்பை பொறுத்த வரையிலும் சென்னையில் நேற்று 24 பேர் மரணித்துள்ளனர். செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா ஐந்து நபர்களும், திருவள்ளூரில் 3 நபர்களும் கன்னியாகுமரி மற்றும் நாகையில் தலா இருவரும் மரணாம் அடைந்துள்ளனர்.

சென்னைக்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் நோய் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 510 நபர்களுக்கும், காஞ்சியில் 392 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக வடக்கு மாவட்டங்களில் 44,364 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்றாவது அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது கோவை. 689 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் மரணம் அடைந்தார். மேற்கு பகுதியில் உள்ள மொத்தம் 8 மாவட்டங்களில் 2224 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். தெற்கில் உள்ள 10 மாவட்டங்களில் மதுரை 495 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 449 பேர் நெல்லையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாவட்டங்களில் 1170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் திருச்சியில் மட்டும் 359 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 1.13 லட்சம் நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட்டது. 23 பேர் மே.வத்தில் இருந்தும், கர்நாடகா, பிஹார் பகுதிகளில் இருந்து 4 பேரும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா இருவரும் உ.பியில் இருந்து ஒருவரும் வந்தனர் அவர்களுக்கும் கோவிட் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரே நாளில் 99,219 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. 88 நாட்களில் மொத்தமாக 50 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment