Advertisment

சென்னைக்கு அடுத்தபடியாக நெல்லை, தூத்துக்குடியில் தொற்று விகிதம் அதிகரிப்பு

சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சோதனை செய்த ஒவ்வொரு 100 பேரிலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai covid19 second wave hospitals make kin care for patients

covid19 second wave tuticorin nellai : சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சோதனை செய்த ஒவ்வொரு 100 பேரிலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர் மரணம் அடைந்துள்ளனர். 17897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதன்முறையாக மூன்று இலக்கங்களை தாண்டி இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஒருவருடத்தில் முதன்முறையாக 40 பேருக்கும் மேற்பட்டோர் ஒரே தினத்தில் மரணமடைந்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் மொத்தம் 1,12,556 நபர்களுக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,933 பேர் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கொரோனா வைரஸால் 11,48,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

37 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் நேற்று 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 22 மாவட்டங்களில் இறப்பு பதிவாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சியில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். மதுரையில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் மாவட்ட நிர்வாகங்களிடம் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். சென்னையில் சோதனை மேற்கொண்ட ஒவ்வொரு 100 பேரிலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருநெல்வேலியில் 17 பேருக்கும், தூத்துக்குடியில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் நேர்மறை விகிதம் 14.2% ஆக உள்ளது. குறைந்தது 13 மாவட்டங்களில் 10%க்கும் மேல் நேர்மறை விகிதம் உள்ளது.

திருநெல்வேலியில் 6 தனியார் சோதனைக் கூட்டங்கள் உட்பட 7 சோதனைக் கூடங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2 சோதனைக் கூட்டங்களும் தென்காசியில் ஒரு சோதனைக் கூடமும் உள்ளது. மதுரை உள்ளிட்ட அருகில் இருக்கும் பெரிய மாவட்டங்களுக்கு மாதிரிகளை அனுப்பி சோதனைகளை முடிவுகளை பெற்று வருகின்றனர் இம்மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள்.

வியாழக்கிழமை அன்று 4 இலக்கங்களில் 28 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சென்னையில் தற்போது 31,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எழுப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 150 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 100 ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகளை அளித்துள்ளது.. கோவிட் -19 நோயாளிகளுக்கு 1,200 தனிமை படுக்கைகள் கொண்ட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ஆறு மாடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக்கில் கூடுதலாக 1,250 படுக்கைகள் (900 ஆக்ஸிஜன் படுக்கைகள்) சேர்க்கும் என்று டீன் டாக்டர் பாலாஜி கூறினார். மே 7 ஆம் தேதிக்குள், நகரத்தில் உள்ள அரசு கோவிட் மருத்துவமனைகளில் குறைந்தது 8,225 படுக்கைகளை அரசு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment