Advertisment

கவர்னர் ரவி எங்கு சென்றாலும் தொடர்ந்து கருப்புக் கொடி: முத்தரசன் அறிவிப்பு

மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால்தான் கவர்னர் மாளிகையில் நடைபெற்ர தேநீர் விருந்து நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்கவில்லை.

author-image
WebDesk
New Update
கவர்னர் ரவி எங்கு சென்றாலும் தொடர்ந்து கருப்புக் கொடி: முத்தரசன் அறிவிப்பு

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வரை கவர்னர் ரவி எங்கு சென்றாலும் தொடர்ந்து கருப்புக் கொடி காட்டப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் தெரிவித்தார்.

Advertisment

மயிலாடுதுறைக்கு கவர்னர் சென்றபோது ஆளும் திமுக உடன் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலையோரம் நின்று அவரது கார் வந்தபோது கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கவர்னரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜகவும், அதிமுகவும் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில், கவர்னர் ரவி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்.

இந்த சூழ்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வரை அவர் எங்கு சென்றாலும் கருப்புக் கொடி காட்டுவோம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால்தான் கவர்னர் மாளிகையில் நடைபெற்ர தேநீர் விருந்து நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்கவில்லை.

பாஜக தலைமையிலான மத்திய அரசு விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்டவற்றிலிருந்து மக்களை திசைதிருப்ப மத பிரச்னைகளை உண்டாக்கியது. எங்கள் கட்சி சார்பில் திருப்பூரில் ஆகஸ்டு 6 மற்றும் 9ஆம் தேதி மாநாடு நடைபெறும்" என்றார் முத்தரசன்.

இதையும் படியுங்கள்: ஆளுனர் உயிருக்கு ஆபத்து: ஜனாதிபதி, பிரதமருக்கு அ.தி.மு.க புகார் மனு

பிரதமர் மோடியையும், சட்டமேதை அம்பேத்கரையும் இசைஞானி இளையராஜா ஒப்பிட்டு கருத்து கூறியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த உலகம் அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டு அவர் கருத்து கூறியதை ஏற்காது என்றார் முத்தரசன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment