scorecardresearch

மாணவிகள் கோரிக்கை ஏற்பு.. 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.. கல்லூரி நிர்வாகம்

இன்று காலை இது தொடர்பாக மாதர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Kalashetra students appeared before the Womens Commission and gave an explanation
கலாஷேத்ரா மாணவிகள் மகளிர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

பாலியல் புகார் வழக்கு தொடர்பாக, கலாக்ஷேத்ரா பேராசிரியர்கள் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் மாணவிகளிடம் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளது.

கலாக்ஷேத்ரா கலை கல்லூரி நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் வன்முறை புகாரைக் குறித்து, ஹரி பத்மன் என்ற பேராசிரியர் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும்,குற்றச்சாட்டில் சிக்கியிருக்க கூடிய மற்ற மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, குறிப்பாக கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் மாணவிகள் சார்பிலும் மாதர் சங்கத்தின் சார்பிலும் வைக்கப்படுகிறது.

இன்று காலை இது தொடர்பாக மாதர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சர்ச்சையில் சிக்கியுள்ள 4 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் மாணவிகளிடம் வாய்மொழியாக வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Crime news download Indian Express Tamil App.

Web Title: Kalakshetra taken action against 4 professors who sexually assaulted students