Advertisment

தொழிலதிபர் நடுக்கடலுக்குள் கடத்திக் கொலை; பெண் வழக்கறிஞர் கைது

சென்னையில் தொழிலதிபரை நடுக்கடலுக்குள் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bussinessman murder, woman advocate arrested, mid sea murder, தொழிலதிபர் கொலை, நடுக்கடலுக்கு கடத்தி கொலை, சுரேஷ் பரத்வாஜ், பிரீத்தி வெங்கடாசலம்,chennai, Suresh Bharadwaj, Preethi Venkatachalam,

bussinessman murder, woman advocate arrested, mid sea murder, தொழிலதிபர் கொலை, நடுக்கடலுக்கு கடத்தி கொலை, சுரேஷ் பரத்வாஜ், பிரீத்தி வெங்கடாசலம்,chennai, Suresh Bharadwaj, Preethi Venkatachalam,

சென்னையில் தொழிலதிபரை நடுக்கடலுக்குள் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஒரு பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை அடையார், இந்திரா நகர், முதல் அவின்யூவைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (50). இவருடைய சகோதரர் அரவிந்த் வெளிநாட்டில் வசிக்கிறார். ஜூன் மாதம், இவர் தனது சகோதரர் சுரேஷ் பரத்வாஜுடன் வழக்கமாக போனில் பேச முயற்சி செய்தபோது அவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவர், சென்னையில் தனது சகோதரருக்கு தெரிந்தவர்களிடம் போன் செய்து விசாரித்திருக்கிறார். அவர்கள், சுரேஷ் பரத்வாஜைப் பார்க்க முடியவில்லை என்றும் அவர் காணவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அரவிந்த் சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைன் மூலம் தனது சகோதரர் காணவில்லை என்று புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அடையார் போலீசார் ஆள் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் பரத்வாஜின் செல்போன் எண்ணை வைத்து அவர் யார் யாருடன் தொடர்புகொண்டிருந்தார். யாருடன் அதிகம் பேசினார் என்று ஆராய்ந்தனர். அந்த எண்களை வைத்து போலீசார் சிலரிடம் விசாரணை நடத்தியதில், காணாமல் போன சுரேஷ் பரத்வாஜ் கொல்லப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

சுரேஷ் பரத்வாஜுன் ஒரு பெண் வழக்கறிஞர் தொடர்பில் இருந்ததும் அவர் ஆட்களை ஏவி சுரேஷ் பரத்வாஜை தாக்கி நடுக்கடலுக்கு கொண்டு சென்று அடித்து கொலை செய்து உடலை கடலில் வீசியதும் தெரியவந்தது.

இதில், படகை நடுக்கடலுக்கு ஓட்டிச்சென்ற திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சுரேஷ் பரத்வாஜை நடுக்கடலுக்கு கடத்திச் செல்ல படகு ஓட்ட ரூ.50,000 கொடுக்கப்பட்டதை போலீசாரிடம் கூறினார்.

மேலும், சுரேஷ் கொடுத்த தகவலின் பேரில், கொலைக்கு உடந்தையாகவும் உடலை கடலில் வீசி தடயத்தை மறைக்கவும் உதவிய திருவொற்றியூரைச் சேர்ந்த, பிரகாஷ் (எ) குடிமி பிரகாஷ், மனோகர், எண்ணூரைச் சேர்ந்த சந்ரு, ராஜா, வியாசார்பாடியைச் சேர்ந்த சதீஷ் குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, சுரேஷ் பரத்வாஜ் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான, அடையாரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரீத்தி வெங்கடாச்சலம் தலைமறைவானதைத் தொடர்ந்து, போலீசார் அவரை வலை வீசி தேடிவந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிரீத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பிரீத்தி இந்த வழக்கு தொடர்பாக தனது வழக்கறிஞர் நண்பருடன் ஆலோசிக்க வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் பிரீத்தி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், பிரீத்தி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு ஆண்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் போன் வைத்துக்கொள்ளாததால், அவருடைய போன் நம்பரை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த வழக்கறிஞர் பிரீத்தி என்று போலீசார் விசாரித்ததில், பிரீத்தி வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்துவந்துள்ளார். இவர் விவாகரத்து பெற்றவர். இவருடைய தந்தை ஐஏஎஸ் அதிகாரி வெங்கடாச்சலத்துக்கு இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்தான் பிரீத்தி. வெங்கடாச்சலத்தின் முதல் மனைவியின் மகள் ஒருவர் தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.

இந்த பிரீத்திக்கும் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜுக்கும் என்ன தொடர்பு என்று விசாரித்த போலீசார், சுரேஷ் பரத்வாஜ் திருமணம் செய்துகொள்ளாமல் தனது வயதான இரண்டு சித்திகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான், அவருடைய வீட்டில் வேலை செய்த முன்னாள் பணிப்பெண் மீது அவருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது. அந்த பணிப்பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வழக்கறிஞர் பிரீத்தியிடம் 65 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பிரீத்தி தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த சுரேஷ் பரத்வாஜ் பிரீத்தியிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட பிரச்னையில்தான் சுரேஷ் பரத்வாஜ் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதில் கைது செய்யப்பட்ட அந்த 6 பேர்களும், பிரீத்தியும் சுரேஷ் பரத்வாஜை நடுக்கடலுக்கு கடத்திச்சென்று கொலை செய்து உடலை கடலில் வீசி தடயத்தை மறைத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண் வழக்கறிஞர் பிரீத்தி ஆட்களை ஏவி தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜை நடுக்கடலுக்கு கடத்திச் சென்று கொலை உடலை கடலில் வீசிய சம்பவத்தில் பிரீத்தி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment