4 லட்சம் வீடுகளை சூறையாடிய கஜ புயல்.. கதறி அழும் மக்கள்

புயலால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தமிழக அரசு ரூ. 100 கோடி

டெல்டா மாவட்டங்களை தாக்கிய அதிவேக கஜ புயலினால் 4 லட்சம் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. வீடுகளை இழந்து மக்கள் கதறும் காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

4 லட்சம் வீடுகள்:

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேஷிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து அந்தமான் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. பின் இது மேலும் வலுவடைந்து ‘கஜா’ புயலாக கடந்த 11 -ம் தேதி உருவெடுத்தது.

அதன் பின் தீவிர புயலாக மாறிய ‘கஜா’ தமிழகத்தை நோக்கி நகர்ந்த நிலையில் ‘கஜா’ புயல் கடலூர்-பாம்பன் இடையே நாகப்பட்டினம் அருகே வலுகுறைந்த புயலாக சென்ற வியாழக்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது.

கஜா’ புயல் கரையை கடக்கும் போது 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் கண்ணில் பட்டதை எல்லாம் சின்னாபின்னமாக்கியது. மரங்கள், வீடுகள் என அனைத்தையும் சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் கால்நடைகளும் உயிரிழந்தன. டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை தொடங்கி திண்டுக்கல், கரூர் மற்றும் கொடைக்கானல் வரை ‘கஜா’ புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கஜா’ புயலால் ரூ.10 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா’ புயலால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் ‘கஜா’ புயலால் ரூ.10 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1.12 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வேதாரண்யத்தில் தென்னை மரங்கள் உட்பட 27.50 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன.

5,200 ஹெக்டேர் சவுக்கு மரங்களும் 16,500 ஹெக்டேர் நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளன. நீண்ட கால பயன் தரும் 400 ஏக்கர் தைல மரங்கள் பெரும் சேதமடைந்துள்ளன. ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் முன் வந்து நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

புயலால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தமிழக அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை நடந்த கணக்கெடுப்பின் படி சுமார் 4 லட்சம் வீடுகள்  சேதமடைந்துள்ளது. வீடுகளை இழந்து மக்கள் கண்ணீர் வெள்ளத்தில்  தவிக்கு காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close