Advertisment

கஜ புயல் செல்லும் பாதை: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்

Gaja Cyclone Landfall at Nagapattinam: நாகப்பட்டினம், தஞ்சாவூர் புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கடல் அலையின் சீற்றம் ஒரு மீட்டருக்கு உயரமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
GAJA Hits TN Coastal Districts, Landfall Nagapattinam, Cuddalore, கஜா புயல், கஜ புயல், தமிழ்நாடு, நாகப்பட்டினம்

GAJA Hits TN Coastal Districts, Landfall Nagapattinam, Cuddalore, கஜா புயல், கஜ புயல், தமிழ்நாடு, நாகப்பட்டினம்

Gaja Cyclone Path: கஜ புயல் இன்று நாகப்பட்டினத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கஜ கரையைக் கடக்கும்போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் கரையை தொட்ட பின்பு, காற்றின் வேகம் குறைந்து மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வழியாக, கேரளாவின் கடற்கரை முத்தமிட்டு அரபிக்கடலில் கலக்கும் கஜ புயல், இதே 50 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.

Advertisment

நேற்று புதன்கிழமை மாலை 5:30 மணி நிலவரப்படி, வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 430 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு - வடகிழக்கு திசையில் 510 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த கஜ புயல், மேற்கு - தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

GAJA Hits TN Coastal Districts, Landfall Nagapattinam, Cuddalore, கஜா புயல், கஜ புயல், தமிழ்நாடு, நாகப்பட்டினம் cyclone Gaja Path: கஜ புயல் பாதை, தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை இயக்குனரகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படம்

Gaja Cyclone Hits Nagapattinam: புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்

13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் கஜ புயல், இன்று வியாழக்கிழமை மாலை 4 முதல் 5 மணிக்குள் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

புயல் கரையை தொட்ட பின்பு, காற்றின் வேகம் குறைந்து மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வழியாக, கேரளாவின் கடற்கரை முத்தமிட்டு அரபிக்கடலில் கலக்கும் கஜ புயல், இதே 50 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.

Read More: கஜ புயல் Live Updates

கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கஜ புயலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குடிசை வீடுகளும், மெட்டல் ஷீட் வீடுகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர் புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கடல் அலையின் சீற்றம் ஒரு மீட்டருக்கு உயரமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Gaja Cyclone Alerts: கஜ-வை எதிர்கொள்ள 10 டிப்ஸ், செல்ஃபி பிரியர்கள் உஷார்

இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment