கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: முதன்முறையாக காவேரி மருத்துவமனையில் தயாளு அம்மாள்!

DMK Chief Karunanidhi Wife, Dayalu Ammal: கருணாநிதியின் மொத்த குடும்பத்தினருடன் முதல்முறையாக தயாளு அம்மாள் வந்திருக்கிறார்.

Dayalu Ammal at Kauvery Hospital: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை முதன்முறையாக பார்க்க நேரில் வந்துள்ளார் தயாளு அம்மாள்

கடந்த ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததாக அறிக்கை வெளியானது.

Karunanidhi Health News Today Live: To Read, Click Here

மீண்டும் ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்தாலும், வயது முதிர்வுக்கு உள்ள பிரச்சனையால் இருக்கும் கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிக்கையில் கூறியிருந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க அரசியல் தலை வரகள் மற்றும் திரைப்பிரபலங்கள் காவிரி மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாயிலில் காத்துக் கிடக்கின்றனர்.

DMK Cheif M Karunanidhi Wife’s dayalu ammal at kauvery hospital, Chennai: கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் வருகை

இந்நிலையில், இன்று (6.8.18) காலையில் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதியம் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உட்பட அனைவரும் மருத்துவமனைக்கு திடீரென வந்தனர்.

Karunanidhi Wife, Dayalu ammal in kauvery hospital, DMK Chief M Karunanidhi Health, தயாளு அம்மாள்

Karunanidhi Wife, Dayalu Ammal at Kauvery Hospital: தயாளு அம்மாள் அழைத்துவரப்பட்ட போது

அவர்களை தொடர்ந்து தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் முதன்முறையாக காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் இருந்து தயாளு அம்மாள், கருணாநிதி பயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

Karunanidhi Health: மருத்துவமனையில் இருந்து திருநாவுக்கரசர் பேட்டி To Read, Click Here

Karunanidhi Health: காவேரியில் மீண்டும் போராடும் சூரியன்! கலக்கத்தில் உறவுகள்! To Read, Click Here

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை வராத தயாளு அம்மாள் முதல்முறையாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். தயாளு அம்மாவுடன் முக தமிழரசு, தயாநிதி அழகிரி மற்றும் அருள்நிதி உள்ளிட்டோரும் உடன் வந்துள்ளனர். இதற்கு முன்னதாக கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் வந்துள்ளதால் காவேரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close