Advertisment

வேதா நிலையம் எங்களுக்கே - அதிமுகவினரின் உதவியை நாடும் தீபா ஜெயக்குமார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
deepa jayakumar, veda nilayam, j jayalalithaa, aiadmk, tamil nadu news, news, தீபா ஜெயக்குமார், வேதா நிலையம், ஜெயலலிதா, தமிழக செய்திகள்

deepa jayakumar, veda nilayam, j jayalalithaa, aiadmk, tamil nadu news, news, தீபா ஜெயக்குமார், வேதா நிலையம், ஜெயலலிதா, தமிழக செய்திகள்

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சரின் இல்லமான 'வேதா நிலயம்' கையகப்படுத்த தமிழக அரசின் அரசாணைக்கு, ஜெயலலிதாவின் உறவினர் தீபா ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்து, இந்த நடவடிக்கையை நிறுத்த அதிமுக உறுப்பினர்களின் ஆதரவை நாடியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து சனிக்கிழமையன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய தீபா, மெரினாவில் நினைவுச் சின்னம் ஒன்று கட்டப்படும்போது, ​​வேதா நிலையத்தை ஒரு நினைவுச்சின்னமாக மாற்ற அரசாங்கம் ஏன் முயற்சிக்கிறது என்று அவர்கேள்வி எழுப்பியுள்ளார். வேதா நிலையம் இல்லத்திற்குள் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது, சட்டப்பூர்வ வாரிசுதாரர்களான என்னிடமும், எனது சகோதரரிடமும் அரசாங்கம் சொத்தை ஒப்படைக்க வேண்டும். நாங்கள் அதை நன்றாக பராமரிப்போம்" என்று அவர் கூறினார். "கொரோனா வைரஸ் நெருக்கடியால் நாடு முடங்கியிருக்கும் இந்த சூழலில் அரசு இந்த அரசாணையை அறிவிக்க வேண்டிய அவசரம் என்ன" என்று கேட்டுள்ளார்.

தமிழகத்தில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 23 சொத்துக்கள் ஏலம்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு

"என் நியாயமான உரிமைகளுக்காகப் போராடவும், எங்கள் வேதா நிலையம் வீட்டைத் திரும்பப் பெறவும், எடப்பாடி கே பழனிசாமி அல்லது ஓ பன்னீர்செல்வம் அல்லது வேறு எவரும் யாரும் தொடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்று அதிமுகவினரிடம் தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார். என் அத்தைக்கு சொந்தமான வீட்டில் உள்ள எந்தவொரு பொருள் மீது எவரும் கைவைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுடன் வீட்டை ஆய்வு செய்ய சட்டப்பூர்வ வாரிசுகள் அனுமதிக்கும் வரை ஜெயலலிதாவின் உடைகள், நகைகள், புத்தகங்கள், விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் கார்களை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று தீபா ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருமாவளவன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு: உதவிப் பேராசிரியர் கைது

வேதா நிலையத்தை நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கான அறக்கட்டளையின் தலைவராக முதலமைச்சர் இருக்கும்போது, துணை முதல்வரும், தகவல் அமைச்சரும் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். "எங்கள் கஷ்டங்களை பரிசீலிக்கவும், ஜெயலலிதாவின் சொத்தை சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ஒப்படைக்கவும் விரைவில் ஆளுநரிடம் ஒரு மனுவை தாக்கல் செய்கிறேன்," என்றும் தீபா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jayalalithaa Deepa Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment