Advertisment

தினகரனை உடனே ரிலீஸ் பண்ணுங்க; கோர்ட் உத்தரவு!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
டிடிவி தினகரன் மீதான தேச துரோக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

TN Live updates: dinakaran about by election

டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை டெல்லி நீதிமன்றம் நேற்று வழங்கியது. தொடர்ந்து தனது உத்தரவில், இருவரும் ரூ.5 லட்சத்திற்கு ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவர்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். குறிப்பாக, சாட்சிகளை கலைக்க திட்டமிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருவரும் ஜாமீன் தொகையை செலுத்திவிட்டதால், அவர்களை விடுவிக்க வேண்டும் கூறியுள்ளது. தினகரனின் பாஸ்போர்ட் அமலாக்கத்துறையிடமும், மல்லிகார்ஜுனாவின் பாஸ்போர்ட் டெல்லி நீதிமன்றத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Mallikarjuna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment