அப்பல்லோவில் இருந்து வீடு திரும்பினார், தயாளு அம்மாள்!

Dayalu Ammal Hospitalized:: தி.மு.க தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து மாலையில் வீடு திரும்பினார்.

Karunanidh’s Wife Dayalu Ammal in Hospital: உடல்நல குறைவு காரணமாக, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தயாளு அம்மாள் சுகவீனம்:

தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதி, கடந்த 7 -ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார்.கருணாநிதி சென்னை, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அப்போதும் அவர் வீல் சேரில்தான் அழைத்து வரப்பட்டார்.

அவரது மறைவைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஸ்டாலின் வேட்பு மனுதாக்கல் செய்தபோது அவர் விபூதி வைத்து ஆசி கூறி ஸ்டாலினை அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், தயாளு அம்மாள், நேற்று இரவு உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

தயாளு அம்மாள்

82 வயதாகும் அவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்துவந்தார். கருணாநிதி இந்த நிலையில், நேற்று இரவு தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவரை பார்க்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள மு.க.அழகிரி, தயாளு அம்மாள் உடல்நலம்குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசிமூலம் கேட்டறிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிகிச்சை முடித்து தயாளு அம்மாள் மாலையில் வீடு திரும்பினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close