திடீர் டெல்லி பயணத்தில் தினகரன்; ஆதரவாளர்கள் குழப்பம்!

சிறையில் இருந்து வெளிவந்த டிடிவி தினகரனுக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஓ.பி.எஸ்.அணி, இ.பி.எஸ். அணி என இரண்டாக பிளவுப்பட்டிருந்த கட்சி, தற்போது தினகரன் அணி என மூன்றாக பிளவாகியுள்ளது. கூடுதலாக இன்னும் 50 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் வருவார்கள் என அந்த அணியினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், டி.டி.வி தினகரன் நேற்று மாலை திடீரென்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் டெல்லி சென்றதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், தினகரனின் டெல்லிப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக, சிறையில் சசிகலாவை சந்தித்த போது அவர், ’60 நாட்களுக்கு அமைதியாக இரு’ என தினகரனிடம் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close