Advertisment

சென்னையில் டைனோசர் திருவிழா: குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது ஜுராஸிக் வேல்ட்

சென்னையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெற உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவச அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dinosaur festival at chennai, Jurassic world coming to chennai, chennai dinosaur festival, chennai centre, chennai centre dinosaur festival, சென்னையில் டைனோசர் திருவிழா, சென்னை, குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது ஜுராஸிக் வோர்ல்ட், டைனோசர் திருவிழா, dinosaur festival india, jurassic world india, india dinosaurs, dinosaur experience india, dinosaur experience chennai

சென்னையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெற உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவச அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த திருவிழாவுக்கு சென்று ஜுராசிக் உலகத்தை பார்ப்பதற்கு தயாராகி வரும் பார்வையாளர்கள், அதற்கு முன்னதாக, மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் சுற்றித் திரிந்த டைனோசர்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

சென்னை செண்டரில் ஜூன் 10ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த

கண்காட்சி ஜுராசிக் உலகத்தை மக்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். இந்த டைனோசர் திருவிழாவில், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், வாழ்ந்து அழிந்துபோன இந்த விலங்குகளின் வாழ்க்கை வாழ்க்கையைக் காட்டும்.

ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை சென்னை சென்டரில் நடைபெறும் இவ்விழா, ஜுராசிக் உலகின் அனுபவத்தை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த டைனோசர் கண்காட்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்தில் நம் நாட்டில் சுற்றித் திரிந்த விலங்குகளை இந்த திருவிழா காட்சிப்படுத்துகிறார்கள். இந்தியாவில் குறைந்தபட்சம் 16 வகை டைனோசர் இனங்கள் வாழ்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த டைனோசர் திருவிழா 20 மீ உயரம் இருந்த பிராச்சியோசொரஸ், 15 மீ உயரம் இருந்த டைரனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் 10 மீ உயரம் இருந்த டிரைசெராடாப்ஸ் போன்ற ராட்சத உயிரினங்களின் இனங்களைக் பார்க்க மக்களுக்கு உதவும்.

இந்த வகையான கண்காட்சி குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும். குழந்தைகள், சிறுவர்கள் புதைபடிவ அகழ்வாராய்ச்சி, டைனோசர் உருவங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டைனோசர் திருவிழாவில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவசமாக அனுமதிக்கப்படும்.

இந்த திருவிழா ஒரு டைனோசர் திருவிழா ஆகஸ்ட் 19 முதல் மும்பையில், இது குர்லாவில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடைபெற உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment