எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி: இயக்குனர் அமீர் உருக்கம்!

நியாப்படி என் மீதும் புதிய தலைமுறை செய்தியாளர் மீதும் அத்தொலைக்காட்சி மீது போட்டப்பட்டிருக்கும் வழக்குகளில் எள்ளவும் உண்மை

கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியில்  அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டு பேசினர். திரைப்பட இயக்குனர் அமீரும் கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்திருந்தார்.

இயக்குனர் அமீர் முன்வைத்த கருத்துகளுக்கு, நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்ற பா.ஜ.க.வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இயக்குனர் அமீர் மீதும், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடுமையான  கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ தேசத்தின் புனித நூலான அரசியல் சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படவும் , காக்கப்படவும் வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதன் நீட்சியாக தான் இன்றைய தினங்களில் நாடு முழுவதும் பல்வேறு தொலைக்காட்ட்சிகளில் கலந்துரையாடல் , விவாத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் நேர்மையான கருத்துக்களை ஆட்சியாளர்களுக்கும், உண்மையை மக்களிடத்தும் எடுத்துச் செல்லும் வாய்ப்பு நடுநிலையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த சூழலில் தான் கடந்த 8 ஆம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சியை நடத்தியது .அதில் கலந்துக் கொண்ட பல தலைவர்களும் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். நானும் என் தரப்பு கருத்தை கூறினேன். அங்கிருந்த சில்கர் கருத்தை  கருத்தால் எதிர் கொள்ள முடியாமல் தக்க பதில் அளிக்காமல் மத துவேஷத்துடன் ஜனநாயகத்திற்கு எதிரான வகையிலும் சட்ட ஒழுங்கை குலைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

அந்த நேரத்தில் நானும் மற்ற தலைவர்களும் தேசிய கட்சியின் பிரநிதி பேசுவதை அமைதியாக் அகேடுக் கோண்டோம். பின்பு அதற்கு பதில் சொல்லும் விதமாக நான் பேசிய போது, “பேசக்கூடாது மீறினால் கடும் விளைவுகளை சந்திப்பாய்” என்று சர்வதிகாரமாக உத்தரவிட்டதோசு மட்டுமல்லாமல் என்னைத் தாக்குவதற்கும் முற்பட்டனர்.

அதிகாரம் அவர்கள் கையில்  இருக்கின்ற காரணத்தினால், தவறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல்   ஜனநாயகத்தை காக்க முயலுகின்ற ஊடகத்திப் மீதும், கலந்துக் கொண்ட ஆளுமைகளின் மீதும் வழக்கு தொடுத்திருப்பது தமிழக மக்களின் நெஞ்சங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.

நியாப்படி என் மீதும் புதிய தலைமுறை செய்தியாளர் மீதும் அத்தொலைக்காட்சி மீது போட்டப்பட்டிருக்கும் வழக்குகளில் எள்ளவும் உண்மை  தன்மையில்லாத காரணத்தால் அவ்வழக்கை வாபஸ் பெறுவதோடு மட்டுமல்லாமல் தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “சத்தியமே வெல்லும்”

எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் , எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலின் , ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ,விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பி.ஜெயசீலன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, கலைஞர்கள், கவிஞ்சர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் எண்ணிலடங்களா பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடக சகோதர்கள், மாணவர்கள் , இளைஞர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் டெனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

×Close
×Close