Advertisment

தீபாவளி 2019 : முன்பதிவு செய்வதற்கான தேதிகளை அறிவித்தது ரயில்வே...

இந்த 5 நாட்களையும் மிஸ் பண்ணிடாதீங்க... அப்பறம் ரொம்ப வருத்தப்படுவீங்க...  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
southern railway to run 8 special trains tamilnadu

southern railway to run 8 special trains tamilnadu

Diwali 2019 Railway Ticket Reservation Dates : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வது என்பது இன்றும் மட்டுமல்ல என்றுமே மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று தான். மகிழ்ச்சி மட்டுமல்ல கூடவே ஒரு வித திகில் உணர்வையும் அது ஏற்படுத்துவது வாஸ்தவமான ஒன்று தான். ஏன் என்றால் நேரத்திற்கு பஸ் கிடைக்காது, அல்லது ரயில் கிடைக்காது. பஸ் சிட்டி எல்லைக்கு வெளியில் இருந்தே புறப்படும். டிக்கெட்களை முன்பதிவு செய்ய இணையத்தின் மீதே கண்ணாய் இருக்க வேண்டும் போன்ற சிரமங்கள் எல்லாம் சொந்த ஊரில் இருந்து வெளியேறி பிழைக்க வந்தவர்களுக்கே தெரியும் என்பது போலான தோற்றமே உருவாகிவிட்டது.

Advertisment

இந்த வருடம் தீபாவளி திருநாளானது அக்டோபர் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று வருகிறது.

இந்த முறை சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான முக்கியமான அறிவிப்பினையும், முன்பதிவு எப்போது துவங்குகிறது என்ற தகவல்களையும் அளித்துள்ளது ரயில்வே.  எந்தெந்த நாட்களில் பயணம் செய்பவர்கள் எந்தெந்த நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விபரம் இதோ.

பயணம் செல்ல வேண்டிய நாளும் டிக்கெட் பதிவு செய்ய வேண்டிய நாளும் (Diwali 2019 Railway Ticket Reservation Dates)

அக்டோபர் 22ம் தேதி பயணம் மேற்கொள்ள இன்றும் (24/06/2019) , அக்டோபர் 23ம் தேதி பயணம் மேற்கொள்ள நாளையும் (25/06/2019) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அக்டோபர் 24ம் தேதி சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் ஜூன் 26ம் தேதி டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் ஜூன் 27ம் தேதி டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

அக்டோபர் 26ம் தேதி ஊருக்கு செல்ல வேண்டுவோர்கள் ஜூன் 28ம் தேதி டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

அதே போன்று தீபாவளி அன்று (அக்டோபர் 27ம் தேதி) பயணம் செய்ய ஜூன் 29ம் தேதி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த 5 நாட்களையும் மிஸ் பண்ணிடாதீங்க... அப்பறம் ரொம்ப வருத்தப்படுவீங்க...

மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள 

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment