Advertisment

தீபாவளிக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை 4,627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diwali 2019 special buses

Diwali 2019 special buses : சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு 12,575 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு எப்போதும் போல் 2,225 பேருந்துகள் இயக்கப்படும். அவை மட்டுமின்றி கூடுதலாக இந்த இரண்டு நாட்களுக்கு 4, 265 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கு 8,310 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 12, 575 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Advertisment

ஆனாலும் கூட்ட நெரிசல், பேருந்து நெரிசல், போக்கு நெருக்கம் ஆகியவை காரணமாக பேருந்துகள் சென்னை மாநகரை தாண்டும் வரை சற்று சிரமம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியூர் சென்ற நபர்களே அதிக அளவு நேரத்தை சென்னை மாநகரில் செலவிட நேர்ந்தது. இன்றும் நாளையும் போக்குவரத்து அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 முக்கிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது

ஆந்திரா மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கு மாதவரம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

வேலூர், காஞ்சிபுரம், மற்றும் ஓசூர் வழியாக சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு அருகே இருந்து இயக்கப்படுகிறது.

தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம் செல்லும் பேருந்துங்கள் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுவை, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் இருந்து இயக்கப்படுகிறது.

மதுரை, நெல்லை, கோவை, ராமநாதபுரம் போன்ற தமிழக மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவுகள் நேற்று முதல் மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. சிறப்பு பேருந்துகள் அல்லாத பிற பேருந்துகளுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியில் இருந்தே நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

27 முதல் 30 தேதி வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை 4,627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மற்ற மாவட்டங்களில் இருந்து இதர ஊர்களுக்கு செல்ல சுமார் 6,921 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தீபாவளி சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்வது எப்படி? இதுவரை 51,000 பேர் பதிவு செய்தனர்

30 டிக்கெட் முன்பதிவு மையங்கள்

சென்னை கோயம்பேட்டில் மட்டும் 26 டிக்கெட் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் 2 இடங்களிலும், மாதவரம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் ஒவ்வொரு இடத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்ய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எம்.ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைக்கிறார்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment