Advertisment

அமமுக அணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள்; பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டி

தேமுதிக - அமமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
அமமுக அணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள்; பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டி

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய விஜயகாந்த் தலைமயிலான தேமுதிக - அமமுகவுடன் கூட்டணியில் இணைவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisment

தேமுதிக 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து அதிமுக - பாஜக கூட்டணியில் நீடித்து வந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்ட தொகுதிகள், எண்ணிக்கை அளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாத் அறிவித்தார்.

இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணை தலைவர் பொன்ராஜ், மநீம கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், திமுதிகவில் இதற்குப் பிறகு எந்த பதிலும் வராததால், மநீம தலைவர் கமல்ஹாசன் இதற்குப் பிறகு, எந்த கட்சிக்கும் நாங்கள் சேர்ப்பதாக இல்லை என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேமுதிக அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தேமுதிக - அமமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், மற்றும் அமமுக மாநில துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் இருவரும் அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், அமமுக சார்பில் ஏற்கெனவே வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமமுக வேட்பாளர்கள் திரும்பப்பெறப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 60 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்:

1.கும்மிடிப்பூண்டி - கே.எம்.டில்லி

2.திருத்தணி - டி.கிருஷ்ணமூர்த்தி

3.ஆவடி - நா.மு.சங்கர்

4.வில்லிவாக்கம் - சுபமங்களம் டில்லிபாபு

5.திரு.வி.க நகர் (தனி) - எ.பி.சேகர்

6.எழும்பூர் (தனி) - டி.பிரபு

7.விருகம்பாக்கம் - பா.பார்த்தசாரதி

8.சோழிங்கநல்லூர் - ஆர்.பி.முருகன்

9.பல்லாவரம் - டி.முருகேசன்

10.செய்யூர் (தனி) - ஏ.சிவா

11.மதுராந்தகம் (தனி) - என்.மூர்த்தி

12.கே.வி.குப்பம் (தனி) - பி.தனசீலன்

13.ஊத்தங்கரை (தனி) - ஆர்.பாக்யராஜ்

14.வேப்பனஹள்ளி - எஸ்.எம்.முருகேசன்

15.பாலக்கோடு - பி.விஜயசங்கர்

16.பென்னாகரம் - ஆர்.உதயகுமார்

17.செங்கம் (தனி) - எஸ்.அன்பு

18.கலசப்பாக்கம் - எம்.நேரு

19.ஆரணி - ஜி.பாஸ்கரன்

20.மயிலம் - ஏ.சுந்தரேசன்

21.திண்டிவனம் (தனி) - கே.சந்திரலேகா

22.வானூர் (தனி) - பி.எம்.கணபதி

23.திருக்கோவிலூர் - எல்.வெங்கடேசன்

24.கள்ளக்குறிச்சி (தனி) - என்.விஜயகுமார்

25.ஏற்காடு (பழங்குடியினர் தனி) - கே.சி.குமார்

26.மேட்டூர் - எம்.ரமேஷ் அரவிந்த்

27.சேலம் மேற்கு - அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்

28.நாமக்கல் - கே.செல்வி

29.குமாரபாளையம் - கே.ஆர்.சிவசுப்பிரமணியன்

30.பெருந்துறை - பி.ஆர்.குழந்தை வேலு

31.பவானி சாகர் (தனி) - ஜி.ரமேஷ்

32.கூடலூர் (தனி) - ஏ.யோகேஸ்வரன்

33.அவிநாசி (தனி) - எஸ்.மீரா

34.திருப்பூர் வடக்கு - எம்.செல்வகுமார்

35.வால்பாறை (தனி) - எம்.எஸ்.முருகராஜ்

36.ஒட்டன்சத்திரம் - பா.மாதவன்

37.நிலக்கோட்டை (தனி) - கே.ராமசாமி

38.கரூர் - ஏ.ரவி

39.கிருஷ்ணராயபுரம் (தனி) - எம்.கதிர்வேல்

40.மணப்பாறை - பி.கிருஷ்ணகோபால்

41.திருவெறும்பூர் - எஸ்.செந்தில்குமார்

42.முசிறி - கே.எஸ்.குமார்

43.பெரம்பலூர் (தனி) - கே.ராஜேந்திரன்

44.திட்டக்குடி (தனி) - ஆர்.உமாநாத்

45.விருத்தாச்சலம் - பிரேமலதா விஜயகாந்த்

46.பண்ருட்டி - பி.சிவகொழுந்து

47.கடலூர் - ஞானபண்டிதன்

48.கீழ்வேளூர் (தனி) - ஆர்.பிரபாகரன்

49.பேராவூரணி - எம்.முத்து சிவக்குமார்

50.புதுக்கோட்டை - எம்.சுப்பிரமணியன்

51.சோழவந்தான் (தனி) - எம்.ஜெயலட்சுமி

52.மதுரை மேற்கு - பி.பாலச்சந்தர்

53.அருப்புக்கோட்டை - ஆர்.ரமேஷ்

54.பரமக்குடி (தனி) - கு.சந்திர பிரகாஷ்

55.தூத்துக்குடி - யு.சந்திரன்

56.ஒட்டபிடாரம் (தனி) - எஸ்.ஆறுமுக நயினார்

57.ஆலங்குளம் - எஸ்.ராஜேந்திரநாதன்

58.ராதாபுரம் - கே.ஜெயபால்

59.குளச்சல் - எம்.சிவக்குமார்

60.விளவன்கோடு - எல்.ஐடன் சோனி

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளுக்கு இவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Assembly Elections 2021 Dmdk Ammk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment