செப்டம்பர் 30-ல் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 30.09.17-ல் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற உள்ளது.

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.09.17 சனிக்கிழமை காலை 8,45 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டடமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான், ஆகிய மாநில கழக செயலாளர்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாவமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close