ஒன்றிணைவோம் வென்றிடுவோம் – விஜயகாந்தின் வித்தியாசமான விழிப்புணர்வு

கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகின்ற மூன்றாம் தேதி வரை இதனை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By: April 24, 2020, 10:54:12 AM

DMDK Coronavirus awareness :  முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை டிபியாக வையுங்கள் என்று தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த். கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்ஃபி எடுத்து அதனை வாட்ஸாப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ப்ரொஃபைல் புகைப்படமாக வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் விஜயகாந்த்.

ஒன்றிணைவோம் வென்றிடுவோம் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த விழிப்புணர்வு அறிக்கையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகின்ற மூன்றாம் தேதி வரை மாஸ்க் அணிந்த புகைப்படத்தை டிபியாக வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை புதைக்க மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற சூழலில், ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியில் அவர்களை புதைக்க நிலத்தினை தருவதாக விஜயகாந்த் கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ரஜினியாக ட்ரம்ப்… மம்முட்டியாக மோடி… இந்த வீடியோவை பார்த்தீங்களா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmdk coronavirus awareness vijayakanth asks dmdk cadres to wear mask and take selfies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X