அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: திரும்பப் பெறக் கோரி தேமுதிக கண்டன பேரணி!

காலை 10 மணியளவில் பனகல் மாளிகை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் திரு.சூரப்பா அவர்களின் துணை வேந்தர் நியமனத்தை திரும்பப் பெற வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழக ஆளுநர் எங்களது இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால், வருகின்ற 18.04.2018 ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணியளவில், எனது தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு காவல்துறையினரால் மேற்கண்ட தேதியில் அனுமதி மறுக்கப்பட்டதால், தேதி மாற்றியமைக்கப்பட்டு 20.04.2018 ஆம் தேதி வெளிக்கிழமை காலை 10 மணியளவில் பனகல் மாளிகை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close