Advertisment

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று

விஜயகாந்த் உடல் நலம் தேற அருகில் இருந்து கவனித்து வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று

DMDK Treasurer Premalatha Vijayakant tested Covid19 positive : தேமுதிக பொருளாளர் மற்றும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மியாட் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளுக்காக சென்ற விஜயகாந்திற்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. சோதனைக்கு பிறகு பரிசோதனை உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது தேமுதிக. அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்றும், விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும் 24ம் தேதி அறிவித்தார் பிரமேலதா.  இந்நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல் நலம் தேற அருகில் இருந்து கவனித்து வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அவர் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Premalatha Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment